981. கிளி ஜோசியம் முதன் முதலில் தோன்றியது பர்மாவில்தான்.
982. விவசாயம் முதன் முதலில் தொடங்கியது தாய்லாந்து நாட்டில்தான்! தமிழகத்தில் 1943-ல்தான் ஜவ்வரிசி இறக்குமதியானது! ஜாவா தீவுகளில் இருந்து வந்ததால், ஜாவா அரிசி என்று வழங்கப்பட்டது. பின்னர் இது ஜவ்வரிசியாக சுருங்கிவிட்டது!
983. விமான விபத்து எப்படி நடந்தது என்று கண்டுபிடிக்கும் பெட்டிதான் கருப்புப் பெட்டி. இதைக் கண்டுபிடித்தவர் டேவிட் வாரன். இவர் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவர்.
984. இதயம் 60 விநாடிக்கு 72 முறை துடிக்கும். அப்படியென்றால் 15 விநாடிகளுக்கு 18 முறை துடிக்க வேண்டும். எனவேதான் நமது மணிக்கட்டின் (நாடி) நரம்புத் துடிப்பை வைத்து இதயத் துடிப்பை மருத்துவர்கள் அளந்து பார்க்கிறார்கள்.
985. ஐ.நா. சபை சின்னத்தில் பூமி உருண்டையுடன் உள்ள இலை ஆலிவ் இலை. 986. இந்தியாவில் முதன்முதலாக அஸ்ஸாமில் 1867-ம் ஆண்டில்தான் நிலத்துக்கு அடியில் எண்ணெய்க் கிணறு இருப்பதைக் கண்டுபிடித்தார்கள்.
987. இந்தியாவில் முதன்முதலில் 1946-ம் ஆண்டில் சென்னையில் இந்தியாவின் திரைப்படக் கல்லூரி அமைக்கப்பட்டது.
988. இந்தியாவில் முதன்முதலில் காபிரைட் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட முதல் நூல், முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் இராஜேந்திரபிரசாத் எழுதிய "சுயசரித்திரம்' என்னும் நூல்.
989. இந்தியாவில் முதன்முதலில் 1962-ம் ஆண்டில் தும்பாவில் இந்திய முதல் விண்வெளி ஆராய்ச்சி நிலையம் அமைக்கப்பட்டது.
990. இந்தியாவில் மிக அதிக காலம் முதலமைச்சராக இருந்தவர் ஜோதிபாசு (மேற்கு வங்காளம்).
991.இந்தியாவின் மிக நீளமான ரயில்வே பிளாட்பாரம் இருக்கும் இடம் காரக்பூர் (மேற்கு வங்காளம்).
992. விண்வெளியில் முதன்முதலில் சாதனை படைத்த சாகச வீரர்களைப் பற்றிய விவரங்கள் வருமாறு:
993. * உலகின் முதல் விண்வெளி வீரர், யூரிகாகரின். முதன்முதலில் பூமியை வலம் வந்த விண்வெளி வீரரும் இவர்தான். (12.4.1961)
994. *முதல் விண்வெளி வீராங்கனை ரஷ்யாவைச் சேர்ந்த வாலன்டினா தெரஷ்கோவா (16.6.1963)
995. *அமெரிக்காவின் முதல் விண்வெளி வீரர், ஆலன் ஷெப்பர்ட் (5.5.1961)
996. *இந்தியாவின் முதல் விண்வெளி வீரர், ராகேஷ் சர்மா (3.4.1984)
997. * இந்தியாவின் முதல் விண்வெளி வீராங்கனை, கல்பனா சாவ்லா (19.11.2003)
998. *சீனாவின் முதல் விண்வெளி வீரர், யாங்லிவெய் (15.10.2003)
999. * தீக்குச்சி முனையில் உள்ள வேதிப்பொருட்கள் - ஆன்டிமனி சல்பைடு, பொட்டாசியம் குளோரைட், கந்தகம்.
1000. * உயர் வெப்பநிலையை அளக்க உதவும் கருவி - பைரோ மீட்டர்
No comments:
Post a Comment