SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Thursday, July 14, 2016

49.இந்திய வரலாறு

இந்திய வரலாறு
151. ஒவ்வொரு படைப்பிரிவினையும் மேற்பார்வை செய்தவர் யார்?
அத்யட்சகர்கள்
152. மௌரியர் காலத்தில் வெளியிடப்பட்ட நாணயத்தின் பெயர்     என்ன?
கர்சபணம் என்ற துளையிடப்பட்ட நாணயம்
153. மௌரியர் காலத்தில் நீதி வழங்கிய அதிகாரியின் பெயர் என்ன?
இராசுக்கர்கள்
154. மௌரியர் காலத்தில் பாடலிபுத்திரத்தில் இருந்து———    நகருக்கும் ———— நகருக்கும் சாலைகள் அமைக்கப்பட்டது.
நேபாள நகருக்கும், கலிங்க நகருக்கும்
155. பாடலிபுத்திரத்தில் இருந்து நேபாளத்திற்க்கு———— நகர் வழியாக சாலைகள் அமைக்கப்பட்டது.
வைசாலி
156. அசோகரின் கல்வெட்டு சேர மக்களை————என்று    குறிப்பிடுகின்றது.
கேரளபுத்திரர்கள்
157. மௌரியர் காலத்தில் வருவாய் துறையில் தலைவர் யார்?
சம்ஹர்த்தர்
158. மௌரியர் காலத்தில் நிலவருவாய் எவ்வளவு?
ஆறில் ஒரு பங்கு (16)
159. அசோகருடைய காலத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தியவர்கள் யார்?
நகராட்சி அதிகாரிகள்
160. அசோகப் பேரரசுக்கு காஸ்மீர் உட்பட்டு இருந்தது எனக்கூறும் நூல் எது?
இராஜதரங்கினி
161. இராஜதரங்கினி என்ற நூலை எழுதியவர்?
கல்காணர்
162. அசோகரின் கிழக்கு எல்லைப்பற்றி அறிய உதவும்  கல்வெட்டு எது?
14வது பாறை கல்வெட்டு
163. மௌரியர் காலத்து அமைச்சர் அவையின் பெயர் என்ன?
மந்திரி பரி~த்
164. மந்திரி பரி~த் என்ற அமைச்சர் அவை பற்றிக் கூறும் கல்வெட்டு எது?
தவ்லி, ஜவ்கடா
165. மௌரியர் காலத்தில் தர்மாஸ்திகா என்பது என்ன?
உரிமையியல் நீதிமன்றம்
166. மௌரியர் காலத்தில் கண்டக சோதனா என்பது என்ன?
குற்றவியல் நீதிமன்றம்
167. மத சகிப்புத் தன்மை பற்றி கூறும் கல்வெட்டு எது?
12- ஆம் பாறை கல்வெட்டு
168. தக்காணத்தின் தலைநகர் எது?
சுவர்ணகிரி
169. கலிங்கத்தின் தலைநகர் எது?
தோசாலி
170. மௌரியர் காலத்தில் வணிகர்கள்———என்று அழைக்கப்பட்டனர்.
ஸ்ரேனிகர்
171. மௌரியர் ஆட்சிகாலத்தில் அரண்மனை வாயில்   காப்பாளரின் பெயர் என்ன?
பிரதிகாரன்
172. கோட்டையின் தலைமை நிர்வாகியின் பெயர் என்ன?             
துர்கபாலன்
173. அசோகர் காஸ்மீரில் நிர்மானித்ததாக யுவான் சுவாங்கால்  கூறப்படும் நகரம் எது?
ஸ்ரீ நகர்
174. அசோகர் தன் சகோதர சகோதரிகள் எத்தனை பேரைக்கொன்று பதவி ஏற்றதாக கருதப்படுகின்றது?
99 பேர்
175. எந்தெந்த ஆண்டுகளுக்கு இடையில் அசோகர் தனது 99 சகோதர சகோதரிகளை கொலை செய்தார் என்று   கருதப்படுகின்றது?
கி.மு. 273, கி.மு.269



No comments:

Post a Comment