SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Friday, July 15, 2016

48.ஒலிவேறுபாடறிந்து சரியான பொருளையறிதல்

ஒலிவேறுபாடறிந்து சரியான பொருளையறிதல்
1.    கனி       கணி            கழி
அ)   கனிவு      கனித்தல்         கொம்பு
ஆ)  பழம்       கணக்கிடு        நீக்கு
இ)   பழம்       கணக்கிடுபவன்   கொம்பு
ஈ)   பழு        கண்ணுடையவன்  நீங்கு
விடை : ஆ)     பழம்       கணக்கிடு        நீக்கு

2.    கன்னி           கண்ணி
அ)   பழம்       படம்
ஆ)  பெண்      ஆண்
இ)   பெண்      மாலை
ஈ)   மணமாகாத பெண் மலர்மாலை
விடை : ஈ) மணமாகாத பெண் மலர்மாலை

3.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளை தருக மாதம் மும்மாரி பொழிந்தால் பஞ்சம் நீங்கும்
அ)மாறி
ஆ)மாழி
இ)மாரி
ஈ)மாலி
விடை : இ)மாரி

4.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளை தருக : பனி
அ)குனி
ஆ)பொழுது
இ)வேளை
ஈ)குளிர்ச்சி
விடை : ஈ)குளிர்ச்சி

5.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளை தருக : சீரிய
அ)சிறப்பான
ஆ)கோபித்த
இ)சீறுதல்
ஈ)வசை
விடை : அ)சிறப்பான

6.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளை தருக : அரம்,அறம்
அ)பாம்பு,கருவி
ஆ)சத்தம்,சமயம்
இ)கருவி,தருமம்
ஈ)தருமம்,கருவி
விடை : இ)கருவி,தருமம்

7.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளை தருக : வேலை,வேளை
அ)பணி,பொழுது
ஆ)பனி,பணி
இ)சமயம்,பணி
ஈ)பொழுது,கட்டு
விடை : அ)பணி,பொழுது

8.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளை தருக : கரை,கறை
அ)அலை,நீக்கு
ஆ)ஓரம்,அழுக்கு
இ)அழுக்கு,ஓரம்
ஈ)நீக்கு,விளம்பு
விடை : ஆ)ஓரம்,அழுக்கு

9.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளை தருக :
     வெல்லம்         வெள்ளம்         வேழம்
அ)   தண்ணீர்         இனிப்பு          புளி
ஆ)  இனிப்பு          தண்ணீர்         யானை
இ)   கசப்பு           கரம்             புலி
ஈ)   புலி             கசப்பு           காரம்
விடை : ஆ)     இனிப்பு          தண்ணீர்         யானை

10.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளை தருக :
     குலவி           குளவி           குழவி
அ)   மகிழ்ந்து         குளம்           குழவி கல் 
ஆ)  அன்பாக பேசு    மாட்டுக்குளம்பு    கூட்டம்
இ)   குலாவுதல்       தேனீ            குழுமு
ஈ)   நெருங்கி         ஒருவகைவண்டு   குழந்தை
விடை : ஈ) நெருங்கி         ஒருவகைவண்டு   குழந்தை



No comments:

Post a Comment