இந்திய வரலாறு
41. சிவாஜியின் படைத்தளபதி எவ்வாறு அழைக்கப்பட்டார்? சேனாதிபதி (சார்-இ-நோபத்)
42. மராட்டிய பேரரசில் அமர்த்தியர் என்பவர் யார்? கணக்கு மேலாளர்
43. சிவாஜி பேரரசில் உளவு, அஞ்சல், மற்றும் அரண்மனை நிர்வாகத் துறையை கவனித்து வந்தவர் யார்? வாக் நாவிஸ்
44. நிதி மற்றும் பொது நிர்வாகத்தை கவனித்துக் கொண்ட சிவாஜியின் அமைச்சர் யார்? பேஷ்வா
45. சிவாஜியின் தகவல் தொடர்பு அமைச்சர் யார்? சச்சீவ்
46. சிவாஜியின் அமைச்சரவையில் அமந்தா என்பவரின் பணி என்ன? சடங்குகள் மற்றும் சமய சட்டம் பற்றி விளக்குபவர்
47. சிவாஜியின் அமைச்சர் அவையில் அறக்கொடை மற்றும் சமய நிர்வாகப்பணிகளை கவனித்துக் கொண்டவர் யார்? பண்டிதராவ்
48. சிவாஜியின் ஆட்சித் துறையில்____மற்றும்_____என்பது பாரசீகப் பட்டம் ஆகும்,காட்டாக, பேஷ்வா
49. சிவாஜியின் நில வருவாய் முறை________என்பவர் புகுத்திய வருவாய் முறையை ஒத்து இருந்தது. மாலிக் ஆம்பர் (அகமது நகர்)
50. சிவாஜி காலத்தில் நிலங்கள்;________அளவு கோளால் அளக்கப்பட்டது. காதி
51. சிவாஜி_______என்ற வருவாய் துறை அதிகாரிகளை நியமித்தார். கர்கூன்கள்
52. சிவாஜி மராட்டியப் பகுதிகளுக்கு உட்படாத மற்ற பகுதிகளில் இருந்துப் பெற்ற இருவகையான வரிகள் யாவை? சௌத் மற்றும் சர் தேஷ்முகி
53. சௌத் என்பது நிலவரியில் எத்தனை பங்கு? நான்கில் ஒரு பங்கு
54. சர்தேஷ்முகி என்பது நிலவரியில் எத்தனை பங்கு? பத்தில் ஒரு பங்கு
55. சிவாஜியின் படைத் துறை நிர்வாகத்தில் குதிரைப் படையை மேற்பார்வை செய்தவர் யார்? ஹவில்தார்
56. மராட்டிய குதிரைப் படையில் இரண்டு பிரிவுகள் இருந்தன. அவை யாவை?பர்கிர்கள், சிலாதார்கள்
57. அரசின் மேற் பார்வையில் நேரடியாக பாராமரிக்கப்பட்ட குதிரை படை பிரிவுக்குப் பெயர் என்ன? பர்கிர்கள்
58. உயர் குடியினர் பாராமரிப்பில் இருந்த குதிரை படைக்கு பெயர் என்ன? சிலாதார்கள்
59. சிவாஜியின் காலாட் படை வீரர்களில்________காலாட் படை வீரர்கள் முக்கிய பங்கு வகித்தனர். மால்வா
60. சிவாஜி ஆட்சிக் காலத்தின் இறுதி பகுதியில் அவர் பெற்ற மொத்த கோட்டைகளின் எண்ணிக்கை எவ்வளவு? 240
No comments:
Post a Comment