தாவரவியல் வினா – விடைகள்
61.இதில் ஒளிச்சேர்க்கையில் துணை செய்வது
அ)கோலன்கைமா
ஆ)குளோரன்கைமா
இ)பாரன்கைமா
ஈ)எபிடெர்மிஸ்
விடை : ஆ)குளோரன்கைமா
62.தண்டமைப்பின் மெழுகுப் படலம்
அ)க்யூட்டிகிள்
ஆ)பெரிசைகிள்
இ)கார்டெக்ஸ்
ஈ)எண்டொடெர்மிஸ்
விடை : அ)க்யூட்டிகிள்
63.இவற்றில் சரியான வரிசை எது?
அ)ப்ளோயம் - உணவுக் கடத்தல்
ஆ)கேம்பியம் - இரண்டாம் நிலை வளர்ச்சி
இ)ஸைலம் - நீர்க்கடத்தல்
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்
64.இவற்றில் தவறான கூற்று எது?
அ)பித் - கடத்துதலில் பயன்படுகின்றது
ஆ)கியூட்டின் - புறத்தோலின் வெளி அடுக்கு
இ)மேற்புறத்தோல் - ஸ்டார்ச் உறை
ஈ)வாஸ்குலார் கற்றை – சைலம் நீரினைக் கடத்துகிறது
விடை : இ)மேற்புறத்தோல் - ஸ்டார்ச் உறை
65.வாயு மண்டலத்திலுள்ள நைட்ரஜனை மண்ணில் நிலைநிறுத்தி மண்வளத்தை பெருக்குபவை
அ)அசட்டோபாக்டர்
ஆ)கிளாஸ்டிரிடியம்
இ)ரைசோபியம்
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்
66.இவற்றில் எதற்கு நொதித்தல் மூலம் பாசில்லஸ் மெகாதீரியம் பாக்டீரியா நறுமணத்தை கொடுக்கிறது
அ)தேயிலை
ஆ)காப்பிக் கொட்டைகள்
இ)கோக்கோ
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்
67.டிக்கா நோய் எந்த தாவரத்தில் ஏற்படுகிறது
அ)நெல்
ஆ)வாழை
இ)புகையிலை
ஈ)வேர்க்கடலை
விடை : ஈ)வேர்க்கடலை
68.புகையிலையில் பல வண்ண நோய் இதானல் ஏற்படுகிறது?
அ)பாக்டீரியா
ஆ)பூஞ்சைகள்
இ)வைரஸ்
ஈ)பாசிகள்
விடை : இ)வைரஸ்
69.அலையிடைக் காடுகள் இங்கு அமைந்துள்ளன
அ)இமயமலை அடிவாரம்
ஆ)மகாநதி கழிமுகப்பகுதி
இ)ராஜஸ்தான்
ஈ)அரியானா தென்பகுதி
விடை : ஆ)மகாநதி கழிமுகப்பகுதி
70.இந்தியாவில் சமுதாயக் காடுகள் திட்டம் ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு
அ)1976
ஆ)1978
இ)1982
ஈ)1984
விடை : அ)1976
No comments:
Post a Comment