இந்திய வரலாறு
181. எந்த கல்வெட்டில் ஹர்ஷரின் கையொப்பம் உள்ளது?
பான்ஸ்கரா கல்வெட்டு
182. ஹர்ஷருக்குப்பின்பு ஆட்சி செய்த 4 தலை முறைகளை பற்றிக் கூறும் கல்வெட்டு எது?
மதுபன் கல்வெட்டு
183. ஹர்ஷரின் வரலாற்றில் இருந்த தலைமுறை குழப்பத்தை எந்த கல்வெட்டு தீர்த்து வைக்கின்றது?
சோனாபாட் கல்வெட்டு
184. சிர்பூர் இலட்சுமணர் கோவில் யார் காலத்தில் கட்டப்பட்டது?
ஹர்ஷர் காலத்தில்
185. ஹர்ஷரின் இறுதிக் காலத்தில் சீனாவில் இருந்து வந்த அரசியல் தூதுவர் யார்?
வாங்-ஹயூன்-சி
186. ஹர்ஷப் பேரரசின் வீழ்ச்சிக்குப்பின் கன்னோசில் புகழ்கொடி நாட்டியவர் யார்?
யசோதவர்மன்
187. யசோதவர்மனின் ஆட்சிக்காலம் என்ன?
கி.பி.700 -740
188. யசோதவர்மனை பற்றிக் கூறும் கல்வெட்டு எது?
மாண்டசோர் கல்வெட்டு
189. யசோதவர்மனின் அவைப் புலவர் யார்?
வாக்பதி
190. வாக்பதி எழுதிய நூலின் பெயர் என்ன?
கௌடவஹோ
191. யசோதவர்மன் —— என்றப் புத்தத்துறவியை சீனாவிற்கு அனுப்பி வைத்தார்.
புத்த சேனர்
192. யசோதவர்மனை தோற்கடித்த காஷ்மீர் அரசர் யார்?
லலிதாதித்யா
193. யசோதவர்மனை லலிதாதித்யா தோற்கடித்தது பற்றிக் கூறும் நூல் எது?
இராஜ தரங்கினி
194. இராஜ தரங்கினி என்ற நூலை எழுதியவர் யார்?
கல்காணர்
195. இராஜ தரங்கினி ——— வரலாற்றைப்பற்றி கூறுகின்றது.
காஷ்மீர்
196. யசோதவர்மன் இயற்றிய நாடக நூல் எது?
இராம யுதயம்
197. காஷ்மீரை ஆட்சி செய்த முதல் சுகந்திர மன்னர் யார்?
துர்பலவர்தனர்
198. காஷ்மீரை ஆட்சி செய்த அரசர்களில் தலை சிறந்தவர் யார்?
முக்த பீட லலிதாதித்தர்
199. ஹர்ஷ சகாப்தம் தொடங்கிய ஆண்டு ———
கி.பி.606
200. யுவான் சுவாங் எத்தனை ஆண்டுகள் இந்தியாவில் தங்கி இருந்தார்?
14 ஆண்டுகள்
No comments:
Post a Comment