SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Tuesday, July 26, 2016

43.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
61.வழுஉச சொல்லை கண்டறிக
அ)அடமானம்
ஆ)அமர்க்களம்
இ)சுவர்
ஈ)பெயரன்
விடை : ஆ)அமர்க்களம்
62.மயங்கொலிப் பிழை இல்லாத சரியான தொடர்
அ)ஆனாத நூற்கடலை அளித்தருலும்
ஆ)ஆனாத நூர்கடலை அறித்தருளும் அமில்தே
இ)ஆனாத நூற்கடலை அளித்தருளும் அமிழ்தே
ஈ)ஆனாத நூற்கடலை அலித்தருளும் அமிழ்தே
விடை : இ)ஆனாத நூற்கடலை அளித்தருளும் அமிழ்தே
63.வழு இல்லாத தொடர் எது?
அ)பீக்ங்காயும் பாவக்காயும் தின்னத் திகட்டுது
ஆ)பீர்க்கங்காயும் பாகற்காயும் தின்னத் தெவிட்டுகின்றன
இ)பீர்க்ங்காயும் பாவற்காயும் தின்னத் திகட்டுகின்றன
ஈ)பீக்கங்காயும் பாகற்காயும் தின்னத் தெவிட்டுத
விடை : ஆ)பீர்க்கங்காயும் பாகற்காயும் தின்னத் தெவிட்டுகின்றன
64.வழுஉச் சொல் நீக்குதல்
அ)சுவற்றில் அருகாமையில செடி உள்ளது
ஆ)சுவரின் அருகாமையில் செடி உள்ளது
இ)சுவற்றின் அருகில் செடி உள்ளது
ஈ)சுவரின் அருகில் செடி உள்ளது
விடை : ஈ)சுவரின் அருகில் செடி உள்ளது
65.வழுஉச் சொல் நீக்கப்பட்ட சொல்
அ)முழுங்கினான்
ஆ)வெண்ணை
இ)கடகால்
ஈ)விழித்தான்
விடை : ஈ)விழித்தான்
66.மரபுப் பிழையற்ற தொடரை அறிக
அ)வாழைச் செடியும் மாஞ்செடியும் தென்னங்கன்னும்
ஆ)வாழைக் கன்றும் மாஞ்செடியும் தென்னங்கன்னும்
இ)வாழைக் கன்றும் மாங்கன்றும் தென்னம்பிள்ளையும்
ஈ)வாழைச் செடியும் மாங்கன்றும் தென்னம்பிள்ளையும்
விடை : இ)வாழைக் கன்றும் மாங்கன்றும் தென்னம்பிள்ளையும்
67.பிழையற்ற தொடர் எது ?
அ)நான் பார்த்தது அவைகள் அன்று
ஆ)நான் பார்த்து அவை அன்று
இ)நான் பார்த்தது அது அன்று
ஈ)நான் பார்த்து அவை அல்ல
விடை : இ)நான் பார்த்தது அது அன்று
68.மரபுப் பிழையற்ற தொடர் எது?
அ)மயில் கூவும்
ஆ)மயில் அகவும்
இ)மயில் கத்தும்
ஈ)மயில் பாடும்
விடை : ஆ)மயில் அகவும்
69.மரபுப் பிழை நீக்கப்பட்ட பொருத்தமானதை தேர்ந்தெடு
பறவை        ஒலி
அ)கூகை - கத்தும்
ஆ)மயில் - கூவும்
இ)ஆந்தை - அலறும்
ஈ)காகம்  - கத்தும்
விடை : இ)ஆந்தை - அலறும்
70.சரியானதைத் தேர்ந்தெடு
அ)குயில் அகவியது ,கிளி பாடியாது
ஆ)குயில் பேசியது,கிளி அகவியது
இ)குயில் கூவியது,கிளி பேசியது
ஈ)குயில் அலறியது,கிளி அகவியது
விடை : இ)குயில் கூவியது,கிளி பேசியது



No comments:

Post a Comment