இந்திய வரலாறு
31. சந்திர குப்த மௌரியரால் தோற்கடிக்கப்பட்ட அலெக்சாண்டரின் படைத்தளபதி யார்?
செலுக்கஸ் நிகேடர்
32. செல்யூகஸ் நிகேடரின் மகளின் பெயர் என்ன?
ஹெலன்
33. செல்யூகஸ் நிகேடர் தன் மகள் ஹலனை யாருக்கு மணமுடித்துக் கொடுத்தார்?
சந்திர குப்த மௌரியருக்கு
34. கிரேக்க தூதுவர் மெகஸ்தனிசை சந்திர குப்த மௌரியர் அவைக்கு அனுப்பி வைத்தவர் யார்?
செல்யூகஸ் நிகேடர்
35. இந்தியாவில் மிகப் பழமையான பல்கலைக் கழகம் எது?
தட்ச சீலம்
36. இந்தியாவில் முதல் பேரரசை நிறுவியவர் யார்?
சந்திர குப்த மௌரியர்
37. இந்தியாவின் முதல் பேரரசர் என்ற பெருமைக்குரியவர் யார்?
சந்திரகுப்தர் மௌரியர்
38. சந்திர குப்த மௌரியரை சமண சமயத்திற்;கு மாற்றியவர் யார்?
பத்ரபாகு
39. சந்திர குப்த மௌரியரும், பத்ரபாகு என்ற சமணத் துறவியும் உண்ணா நோம்பு இருந்த இடம் எது?
சரவணபெலகொலா
40. சரவணபெலகொலா என்பது எந்த மாநிலத்தில் உள்ளது?
கர்நாடகா மாநிலம் - மைசூர்
41. சந்திர குப்த மௌரியரும், பத்ரபாகுவும்————என்ற உண்ணா நோம்பை மேற்கொண்டனர்.
சல்லேகனம்
42. சந்திர குப்த மௌரியரும், சமண துறவி பத்ரபாகுவும் இறந்த இடம் எது?
சந்திரகிரி மலையில் உள்ள சரவணபெலகொலா
43. சந்திர குப்த மௌரியர் மற்றும் பத்ரபாகுவின் நினைவாக சந்திரகிரி மலையில் கட்டப்பட்ட கோவிலின் பெயர் என்ன?
சந்திர பாஸ்டி
44. சந்திர குப்த மௌரியர் எந்த ஆண்டு இறந்தார்?
கி.மு.298
45. சந்திர குப்த மௌரியருக்கு பின்பு ஆட்சிக்கு வந்த அவரது மகன் பெயர் என்ன?
பிந்துசாரர்
46. பிந்துசாரர் எந்த ஆண்டு ஆட்சிக்கு வந்தார்?
கி.மு.298
47. பிந்துசாரர்————என்ற பட்டத்தை சூட்டிக்கொண்டார்.
அமித்ரகதா
48. அமித்ரகதா என்றால் என்ன பொருள்?
எதிரிகளை அழிப்பவர்
49. பிந்துசாரர் அவைக்கு வந்த கிரேக்க தூதுவர் யார்?
டைமக்கஸ்
50. டைமக்கஸ் என்ற தூதுவரை பிந்துசாரர் அவைக்கு அனுப்பி வைத்த கிரேக்க மன்னன் யார்?
முதலாம் ஆண்டியோகஸ்
No comments:
Post a Comment