இந்திய வரலாறு
491. முகலாயர் காலத்தில் மஸ்ஸிலின் துணி எங்கு உற்பத்தி செய்யப்பட்டது?டாக்கா மாவட்டம் - சோனார்
492. முகலாயர் காலத்தில் தொலைதூர வர்த்தகத்தில் ஈடுபட்டோரை எவ்வாறு அழைத்தனர்? சேத் மற்றும் போரா
493. முகலாயர் காலத்தில் உள் நாட்டு வணிகர்களை எவ்வாறு அழைத்தனர்?பானிக்
494. முகலாயர் காலத்தில் மொத்த வணிகர்களை எவ்வாறு அழைத்தனர்? பஞ்சாராக்கள்
495. முகலாயர்களின் முக்கிய துறைமுகங்கள் எவை எவை? காம்கே, சூரத், சட்கோன், மலபார்
496. முகலாயர் காலத்தில் நாட்டின் மிகப் பெரிய வியாபார மையமாக விளங்கியது எது? லாகூர்
497. முகலாயர் காலத்தில் வாழ்ந்த சமய சீர்திருத்தவாதிகள் யார் யார்? ஏக்நாத், துக்காராம், ராம்தாஸ்
498. பானிபட்டில் காபூல் பார்க்கை உருவாக்கியவர் யார்? பாபர்
499. பஞ்சாப் பங்சோர் தோட்டத்தை உருவாக்கியவர் யார்? உமாயூன்
500. காஷ்மீர் நிஷத்பாத் தோட்டத்தை அமைத்தவர் யார்? அக்பர்
501. லாகூர் ஷாலிமார் பாக்கை உருவாக்கியவர் யார்? ஜஹாங்கீர்
502. பாரசீக கட்டிடக் கலை பாணியை இந்தியாவில் அறிமுகப்படுத்தியவர் யார்?பாபர்
503. கி.பி.1532-ல் தின்பானா அரண்மனையை கட்டியவர் யார்? உமாயூன்
504. பஞ்சாப் பாத்பாட் மசூதியை கட்டியவர் யார்? உமாயூன்
505. தில்லியில் புராணாகில்லாஇ இலா-இ-குஹனா மசூதியை 1545-ல் கட்டியவர் யார்? ஷெர்ஷா
506. ஜீலம் நதிக்கரையில் ரோட்டாஸ்கார் கோடடையை கட்டியவர் யார்? ஷெர்ஷா
507. கி.பி. 1565-ல் ஆக்ராவில் செங்கோட்டையை கட்டியவர் யார்? அக்பர்
508. இலாகூர் கோட்டையை கட்டிய முகலாய மன்னர் யார்? அக்பர்
509. அக்பரால் சுஃபி துறவி ஷேக் சலீம் சிஸ்தி நினைவாக கட்டிய நகரின் பெயர் என்ன? பதேபூர் சிக்கரி
510. பதேபூர் சிக்கரி என்றால் என்ன பொருள்? வெற்றி நகரம்
No comments:
Post a Comment