இந்திய வரலாறு
21. இந்தியாவின் பாக்கியவெல்லி என குறிப்பிடப்படுபவர் யார்?
அ) சாணக்கியர்
ஆ) அசோகர்
இ) சந்திர குப்தா
ஈ) பிம்பிசாரர்
விடை: அ) சாணக்கியர்
22. செல்யூகஸ் நீகேடரால் மௌரிய அரசவைக்கு அனுப்பப்பட்ட தூதர் யார்?
அ) மாக்கிய வல்லி
ஆ) யுவான் சுவாங்
இ) கௌடில்யர்
ஈ) மெகஸ்தனிஸ்
விடை: ஈ) மெகஸ்தனிஸ்
23. சந்திரகுப்தர் பின்பற்றிய சமயம் எது?
அ) புத்த சமயம்
ஆ) சமண சமயம்
இ) இஸ்லாம்
ஈ) இந்து
விடை: ஆ) சமண சமயம்
24. சந்திரகுப்தரின் நினைவாகக் கட்டப்பட்ட பழமையான கோவில் எது?
அ) காஞ்சி ஸ்தூபி
ஆ) சந்திரபாஸ்டி
இ) சாரநாத் ஸ்தூபி
ஈ) கோமதீஸ்வர கோவில்
விடை: ஆ) சந்திரபாஸ்டி
25. பிந்து சாரரின் மூத்த மகன் யார்?
அ) மீரா
ஆ) சுமனா
இ) அசோகர்
ஈ) புஷ்யமித்திரன்
விடை: ஆ) சுமனா
26. அசோகர் புத்த சமயத்தைப் பின்பற்ற காரணமானவர் யார்?
அ) சாணக்கியர்
ஆ) பிந்துசாரா
இ) மெகஸ்தனிஸ்
ஈ) உபகுப்தர்
விடை: ஈ) உபகுப்தர்
27. திஸா என்பவர் யார்?
அ) மௌரிய பிரதமர்
ஆ) மௌரிய தளபதி
இ) புத்த துறவி
ஈ) நாலந்தாவின் பேராசிரியர்
விடை: இ) புத்த துறவி
28. அசோகரின் கல்வெட்டுகள் எவ்விடத்தில் அமைக்கப்பட்டன?
அ) தலைநகரங்களில்
ஆ) நாட்டின் எல்லைகளில்
இ) அயல்நாடுகளில்
ஈ) மக்கள் கூடும் பொது இடங்களில்
விடை: ஈ) மக்கள் கூடும் பொது இடங்களில்
29. மக்கள் தூய வாழ்க்கை வாழவும் நல்லொழுக்கங்கள் பின்பற்றுவதை உற்சாகப்படுத்தவும் நியமிக்கப்பட்ட அதிகாரிகள்.
அ) தர்மயுக்தரர்
ஆ) தர்ம மகாமாத்திரர்
இ)அ மற்றும் ஆ சரியானவை
ஈ) எவருமில்லை
விடை: இ)அ மற்றும் ஆ சரியானவை
30. அசோகர் தனது மகன் மகேந்திரனையும் மகள் சங்மித்திரையையும் புத்தமதத்தைப் பரப்ப எந்த நாட்டிற்கு அனுப்பினார்?
அ) பர்மா
ஆ) சீனா
இ) இலங்கை
ஈ) ஜப்பான்
விடை: இ) இலங்கை
No comments:
Post a Comment