SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Thursday, July 28, 2016

38.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
31.சரியான இயைபுத் தொடரைத் தேர்க
பறிக்கின்ற உரிமை இனி நடவா தென்போம்
பார்மீது எல்லோரும சமமே என்போம்"
அ)பறிக்கின்ற - பார்மீது
ஆ)தென்போம் - என்போம்
இ)சமமே - உரிமை
ஈ)எல்லோரும் - என்போம்
விடை : ஆ)தென்போம் - என்போம்
32.'கடலில் கரைத்த பெருங்காயம் போல் " - உவமை விளக்கும் பொருள்
அ)இழிவு
ஆ)பகை
இ)திரும்பக் கிட்டும்
ஈ)திரும்பி வராது
விடை : ஈ)திரும்பி வராது
33.உவமையால் விளக்கப்பெறும் கருத்தைத் தேர்க 'இணைரூழ்த்தும் நாறா மலரனையர்"
அ)கற்றதைப் பிறர் மனம் கொள விரித்துரையாதார்
ஆ)மலரில் மணமின்மை
இ)பொருள் தெளிவின்மை
ஈ)கற்றவை மனம் கொள்ளாமை
விடை : அ)கற்றதைப் பிறர் மனம் கொள விரித்துரையாதார்
34.உவமையால ;விளக்கப் பெறும் கருத்தைத் தேர்க 'வல்உகிர்ப் புலிஎலாம் ஒருவழிப் புகுந்த போலவே"
அ)வீரம் பொருந்தியோர் போர் புரிதல்
ஆ)படை வீரர்களெல்லாம் ஒர் இடத்தில் திரளுதல்
இ)வீரர்கள் எதிர்நின்று தாக்குதல்
ஈ)வீரர்களின் போர் முழக்கம்
விடை : ஆ)படை வீரர்களெல்லாம் ஒர் இடத்தில் திரளுதல்
35.'தெரு நாய் போல" - உவமை விளக்கம் பொருள்
அ)ஆர்வம்
ஆ)அலைச்சல்
இ)இன்பம்
ஈ)உணவு
விடை : ஆ)அலைச்சல்
36."ஒரு நாள் கூத்துக்கு மீசை எடுத்தது போல" - உவமை விளக்கும் பொருள்
அ)நல்ல செயல்
ஆ)வீண் செயல்
இ)தீய செயல்
ஈ)வன் செயல்
விடை : ஆ)வீண் செயல்
37.'சாயம் போன சேலை போல"- உவமை விளக்கும் பொருள்
அ)மதிப்பின்மை
ஆ)உயர்ந்தது
இ)உண்மையானது
ஈ)பாராட்டுதல்
விடை : அ)மதிப்பின்மை
38.வேர்ச்சொல்லைத் தேர்வு செய்க: 'படித்தாள்"
அ)படித்த
ஆ)படிக்கும்
இ)படி
ஈ)படித்
விடை : இ)படி
39.விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்கவும்
'இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தை இயற்றினார் ?
அ)இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தை இயற்றினாரா?
ஆ)சிலப்பதிகாரத்தை இயற்றியது யார்?
இ)சிலப்பதிகாரத்தை இயற்றியது இளங்கோவடிகளா?
ஈ)சிலப்பதிhகரத்தை இயற்றியது இறங்கோவடிகளா கம்பரா?
விடை : ஆ)சிலப்பதிகாரத்தை இயற்றியது யார்?
40.விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்கவும்
அகிம்சையின் மறுஉருவம் காந்தியடிகளளா?
அ)அகிம்சையின் உருவம் காந்தியடிகளா?
ஆ)அகிம்சையின் உருவம் எது?
இ)அகிம்சையின் மறு உருவம் எது?
ஈ)அகிம்சையின் மறு உருவம் யார்?
விடை : ஈ)அகிம்சையின் மறு உருவம் யார்?



No comments:

Post a Comment