விலங்கியல் வினா – விடைகள் மனித உடல் உறுப்பு மண்டலங்களின் அமைப்பும் செயல்பாடுகளும்
81.இவற்றில் பொருத்தமற்ற இணை எது?
அ)ஆர்ட்டீரியோல்கள் - மெல்லிய நுண்தமனிகள்
ஆ)வென்யூல்கள் - நுண்சிரைகள்
இ)ஈரிதழ் வால்வு – பல்மோனரி வால்வு
ஈ)பிறைவடிவ வால்வு – பொருந்தமனி வால்வு
விடை : இ)ஈரிதழ் வால்வு – பல்மோனரி வால்வு
82.இவற்றில் தவறான கூற்று எது?
அ)தந்துகிகள் இதயத்தை சுற்றியுள்ள இரத்தக்குழாய் மூவிதழ் வால்வு
ஆ)வென்யூல்கள் திசுக்களிலிருந்து சுத்திகரிக்கப்படாத இரத்தததை எடுத்து வருகின்றன
இ)வென்யூல்கள் இணைந்து சிரைகளாக மாறுகின்றன
ஈ)சிரைகள் கீழ்பெருஞ் சிரையாகவு; மெற்பொருஞ்சிரையாகவும் மாறி இரத்தத்தைச் சேகரித்து இதயத்தினுள் சேர்க்கிறது
விடை : அ)தந்துகிகள் இதயத்தை சுற்றியுள்ள இரத்தக்குழாய் மூவிதழ் வால்வு
83.இரத்தம் பிளாஸ்மா எதனை கொண்டிருக்கவில்லை
அ)நீர்
ஆ)பிளாஸ்மா
இ)மெடுல்லா
ஈ)கனிம மற்றும் கரிம ஆக்ககூறுகள்
விடை : இ)மெடுல்லா
84.இவற்றில் தவறான கூற்று எது?
அ)பிளாஸ்மா புரொட்டின் என்பதன் பிளாஸ்மாவின் முக்கிய கனிமக் கூறாகும்
ஆ)பிளாஸ்மாவில் உள்ள குளொபுலின் நோய் எதிர்ப்பாற்றலுக்கு இன்றியமையாதது
இ)இரத்தம் உறைலில் ரீனல் பிரமீடில் முக்கிய பங்கை வகிக்கின்றது
ஈ)ஆல்புமின் நீர்ச் சமநிலையை சீராக்குகின்றுத
விடை : இ)இரத்தம் உறைலில் ரீனல் பிரமீடில் முக்கிய பங்கை வகிக்கின்றது
85.இவற்றில் பொருத்தமான இணை எது?
அ)இரத்த சிவப்பணுக்கள் - அமீபாய்டு செல்கள்
ஆ)இரத்த வெள்ளையணுக்கள் ஹீமோகுளோபின்
இ)இரத்த தட்டைச் செல்கள் - எலும்பின் சிவப்பு மஜ்ஜை
ஈ)எரித்ரோசைட்டுகள் - ஃபைபிரினோஜன்
விடை : இ)இரத்த தட்டைச் செல்கள் - எலும்பின் சிவப்பு மஜ்ஜை
86.இவற்றில் தவறான கூற்று எது?
அ)எலும்பின் சிவப்புமஜ்ஜையிலுள்ள சிறிய செல்கள் அழிவதால் த்ராம்போ சைட்டுக்ள உருவாக்கின்றன
ஆ)எலும்பின் சிவப்பு மஜ்ழையில் பெரிய செல்கள் அழிவதால் த்ராம் போசைட்டுகளள் உருவாக்கின்றன
இ)எரித்ரோசைட்டுகள் இரத்தத்திற்கு சிவப்பு நிறத்தையளிக்கும் ஹீமோ குளொபினைப் பெற்றிருக்கின்றன
ஈ)ஹுமோகுளோபின் என்ற சுவாச நிறமி ஆக்ஸிஜன் மீது அதிக நாட்டம் உடையது சுவாசித்திலில் முக்கியப் பங்கு கொள்ளகிறது
விடை : அ)எலும்பின் சிவப்புமஜ்ஜையிலுள்ள சிறிய செல்கள் அழிவதால் த்ராம்போ சைட்டுக்ள உருவாக்கின்றன
87.நமது உடலின் மாஸ்டர் கெமிஸ்ட் என்று அழைக்கப்படுவது
அ)இதயம்
ஆ)நுரையீரல்
இ)தோல்
ஈ)சிறுநீரகம்
விடை : ஈ)சிறுநீரகம்
88.சிறுநீருகத்தின் முக்கிய கழிவுப்பொருள்
அ)யூரியா
ஆ)யூரிக் அமிலம்
இ)கிரியாட்டினின்
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்
89.நமது உடலின் முக்கிய கழிவு நீக்க உறுப்பு
அ)சிறுநீரகம்
ஆ)தோல்
இ)நுரையீரல்
ஈ)கண்
விடை : அ)சிறுநீரகம்
90.இவற்றில் பொருத்தமான இணை எது?
கழிவு நீக்க உறுப்பு கழிவுப் பொருட்கள்
அ)நுரையீரல் - ரைட்ரஜன் கழிவுகள்
ஆ)சிறுநீரகம் - கார்பன் - டை – ஆக்ஸைடு
இ)தோல் - நீர் மற்றும் உப்புகள்
ஈ)சிறுநீரகம் - நீர் ஆவியாதல்
விடை : இ)தோல் - நீர் மற்றும் உப்புகள்
No comments:
Post a Comment