701. முகமது நபி, ஷேக்ஸ்பியர், முத்துராமலிங்கத் தேவர்... மூன்று பேரும் தங்கள் பிறந்த தேதி அன்றே மறைந்தனர்.
702. ஆசியாவிலேயே முதல் முதலாக விற்பனை வரியை அறிமுகப்படுத்திய மாநிலம் தமிழ்நாடு. அறிமுகப்படுத்தியவர் ராஜாஜி.
703. பிப்ரவரி 29 ஆம் தேதி பிறந்தவர்களுக்கு நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் பிறந்தநாள் வரும். பிப்ரவரி 29 அன்று பிறந்தவர் மெரார்ஜி தேசாய்.
704. கொறிக்கும் விலங்குகளில் (Rodents) பெரியது Capybara .
705. ஹூலக் (Hoolock) எனப்படும் கிப்பன் (Gibbon) குரங்குதான் இந்தியாவில் காணப்படும் ஒரே வாலில்லாக் குரங்கு.
706. இந்திய ஹாக்கி வீரர் த்யான்சந்தின் வாழ்க்கை வரலாற்றின் பெயர் 'Goal'.
707. பேஸ்பால் விளையாட்டு களம் 'Diamond' எனப்படுகிறது.
708. 'Bogey', Bunker', 'Bormy' போன்ற வார்த்தைகள் போலோ விளையாட்டோடு தொடர்புடையவை.
709. இந்தியா சுதந்திரமடைந்தபோது இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்தவர் ஆச்சார்ய கிருபளானி.
710. மார்க்ரெட் மிட்சல் எழுதிய ஒரே நாவலான 'Gone with the wind' அவருக்கு மிகப்பெரிய புகழைத் தேடித்தந்தது.
711. ஐரோப்பிய நாடுகளின் காலனியாக இருந்திராத ஒரே ஆப்பிரிக்க நாடு லைபீரியா (Liberia).
712. ஷெனாய் கலைஞர் பிஸ்மில்லாகான், சிதார் கலைஞர் பண்டிட் ரவிசங்கர் இருவரும் வாரணாசியில் பிறந்தவர்கள்.
713. ஷேக்ஸ்பியர் படைப்புகளில் the என்ற சொல் 27, 457 முறையும் and என்ற சொல் 25, 285 முறையும் பயன்படுத்தப்பட்டுள்ளன.
714. போப்பாண்டவரால் ஆசீர்வதிக்கப்பட்ட முதல் நாவல் 'பென்ஹர் (Benhur). நூலின் ஆசிரியர் Lewis Wallace. பென்ஹர் படத்தை இயக்கியவர் வில்லியம் வைலர்.
715. அலிபாபாவும் நாற்பது திருடர்களும், அலாவுதீனும் அற்புத விளக்கும், சிந்துபாத் மாலுமியின் சாகஸங்கள் ஆகியவை '1001 அரேபிய இரவுகள்' நூலில் உள்ள கதைகள்.
716. இந்தியாவில் ஆந்திர மாநிலத்தில் 'தெனாலி' என்ற ஊர் இருப்பதுபோல இலங்கையிலும் 'தெனாலி' என்ற ஊர் உள்ளது.
717. தெனாலிராமன் எழுதிய நூலின் பெயர் மகாதேவ பாண்டுரங்கம்.
718. விக்கிரமாதித்தன் கதைகளில் வரும் அமைச்சரின் பெயர் பட்டி.
719. இந்தியா சுதந்திரமடையும்போது பிரிட்டிஷ் பிரதமராக இருந்தவர் கிளமன்ட் அட்லி.
720. உலகிலேயே மிக அதிகமான ஆண்டுகள் ஒரு நாட்டின் அதிபராக இருந்து வருபவர் ஃபிடல் காஸ்ட்ரோ (கியூபா நாடு, 47ஆண்டுகள்).
No comments:
Post a Comment