இந்திய வரலாறு
1. குப்த மரபைத் தோற்றுவித்தவர் யார்?
அ) முதலாம் சந்திரகுப்தர்
ஆ) இரண்டாம் சந்திரகுப்தர்
இ) ஸ்ரீகுப்தர்
ஈ) குமாரகுப்தர்
விடை: இ) ஸ்ரீகுப்தர்
2. இரண்டாம் சந்திரகுப்தரின் மற்றொரு தலைநகர்
அ) பாடலிபுத்திரம்
ஆ) உஜ்ஜயினி
இ) டெல்லி
ஈ) காசி
விடை: ஆ) உஜ்ஜயினி
3. இரண்டாம் சந்திரகுப்தருக்குப் பின் ஆட்சிக்கு வந்தவர்
அ) குமார குப்தர்
ஆ) ஸ்கந்த குப்தர்
இ) முதலாம் சந்திரகுப்தர்
ஈ) யூணர்கள்
விடை:அ) குமார குப்தர்
4. குப்தர்களின் அரசவை மொழி எது?
அ) சமஸ்கிருதம்
ஆ) பாலி
இ) பிராக்கிருதம்
ஈ) தமிழ்
விடை:ஆ) பாலி
5. பஞ்ச தந்திரக் கதைகளை எழுதியவர் யார்?
அ) விசாகதத்தர்
ஆ) விஷ்ணு சர்மா
இ) வராக மித்திரர்
ஈ) காளிதாசர்
விடை:ஆ) விஷ்ணு சர்மா
6. குப்தர்களின் உலகப்புகழ் பெற்ற குகை ஓவியங்கள் காணப்படும் இடம் எது?
அ) கயா
ஆ) மதுரா
இ) அஜந்தா
ஈ) சாரநாத்
விடை:இ) அஜந்தா
7. உலகம் உருண்டை வடிவமானது என்று நிருபித்தவர் யார்?
அ) வராகமித்திரர்
ஆ) ஆரியபட்டர்
இ) பிரம்ம குப்தர்
ஈ) வராகபட்டர்
விடை:ஈ) வராகபட்டர்
8. ஆயுர்வேத மருத்துவத்தில் சிறந்து விளங்கியவர் யார்?
அ) சரகர்
ஆ) சுசருதர்
இ) தன்வந்திரி
ஈ) நாகார்ஜீனர்
விடை: இ) தன்வந்திரி
9. சந்திர குப்தரால் சிறை செய்யப்பட்ட பல்லவ அரசர் யார்?
அ) மகேந்திரவர்மன்
ஆ) நரசிம்ம வர்மன்
இ) விஷ்ணுகோபன்
ஈ) சிம்ம விஷ்ணு
விடை:இ) விஷ்ணுகோபன்
10. விக்கிரமாதித்யன் என்பது யாருடைய பட்டப் பெயர்?
அ) முதலாம் சந்திரகுப்தர்
ஆ) இரண்டாம் சந்திர குப்தர்
இ) சமுத்திர குப்தர்
ஈ) குமார குப்தர்
விடை:ஆ) இரண்டாம் சந்திர குப்தர்
No comments:
Post a Comment