இந்திய வரலாறு
361. கஜினி முகமதுவின் இந்தியப் படையெடுப்பின் நோக்கம் என்ன?
இந்திய அரசனைப்போரில்; தோற்கடித்து கொள்ளையடிப்பது
362. முகமது கோரியின் இந்தியப்படையெடுப்பின் நோக்கம் என்ன?
இந்தியாவில் இஸ்லாமிய ஆட்சியை உருவாக்குதல்
363. தில்லியை திறமையாக அரசாண்ட இந்து மன்னர்களில் கடைசி மன்னன் யார்?
பிரித்விராஜ சௌகான்
364. கி.பி.1216- இல் இல்டூமிஷ்ஷால் தரையின் போரில் தோற்கடிக்கப்பட்டவர் யார்?
தாஜீதின் இல்டுஸ்
365. இல்டூமிஷ்iஷ எதிர்த்து போரில் தோற்று ஆற்றில் மூழ்கிய இறந்த சிந்து மன்னன் யார்?
நாசிருதீன் குபாச்சா
366. இல்டூமிஷ் கால ஆதரங்களைத் தருகின்ற நூலின் பெயர் என்ன?
தபாகாத்தி நஸ்ரி
367. தபாகாத்தி நஸ்ரி என்ற நூலை எழுதியவர் யார்?
மின்ஹாஜீஸ் சிராஜ்
368. இல்டூமிஷ் இராந்தப்பூரை எந்த ஆண்டு கைப்பற்றினார்?
கி.பி. 1226
369. இல்டுமிஷ் கி.பி.1236-இல் எந்த இடத்தில் மரண மடைந்தார்?
பானியான்
370. சுல்தான் இரசியா அரசியாவதற்குத் தடையாக இருந்தவர்கள் யார்?
நிஷாமுல் மற்றும் முகமது ஜீனைதி
371. 20 வருடம் அமைச்சராகவும் 20 வருடம் மன்னராகவும் இருந்தவர் யார்?
பால்பன்
372. பால்பனின் படைத் தளபதி யார்?
இமாதுல் முல்க்
373. கி.பி. 1299 - இல் அலாவுதீன் ஆட்சியில் படையெடுத்து வந்த மங்கோலிய படைத் தலைவர் யார்?
குட்டுலு க்வாஜா
374. அலாவுதீன் படைகளால் கொள்ளையிடப்பட்ட புகழ்மிக்க கோவில் எது?
சோமநாதர் கோவில்
375. கி.பி.1321 மற்றும் 1323- ஆம் ஆண்டுகளில் எந்த மன்னருக்கு எதிராக கியாசுதீன் துக்ளக் படையெடுத்தார்;?
இரண்டாம் பிரதாப் ருத்ர தேவா
376. தேவகிரிக்கு முகமது பின் துக்ளக் வைத்த பெயர் என்ன?
தௌலதாபாத்
377. தில்லிக்கும் தேவகிரிக்கும் இடையே உள்ள தூரம் எவ்வளவு?
700 மைல்கள்
378. மன்னன் செய்த தவறுக்கு 21 சவுக்கடி கொடுக்க வேண்டும் என்று நீதிபதி தீர்ப்பளித்ததை ஏற்றுக் கொண்ட மன்னன் யார்?
முகமது பின் துக்ளக்
379. எங்கு நடைபெற்றப் புரட்சியை அடக்கச் சென்ற வழியில் முகமது பின் துக்ளக் மரணமடைந்தார்?
தட்டா
380. அடிமைகள் முறையை ஆதரித்த பெரோஸ் துக்ளக்கிடம்இருந்த அடிமைகள் எண்ணிக்கை எவ்வளவு?
1,80,000
No comments:
Post a Comment