SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Wednesday, July 20, 2016

36.விலங்கியல் வினா – விடைகள் மனித உடல் உறுப்பு மண்டலங்களின் அமைப்பும் செயல்பாடுகளும்

விலங்கியல் வினா விடைகள்  மனித உடல் உறுப்பு மண்டலங்களின் அமைப்பும் செயல்பாடுகளும்
71.இவற்றில் எவை இரத்தச் சுற்று உறுப்புகள் அல்ல?
அ)இதயம் ,தமனி
ஆ)சிரைகள்,தந்துகிகள்
இ)நுரையீரல்,சிறுநீரகம்
ஈ)இரத்தம்,நிணநீர்
விடை : இ)நுரையீரல்,சிறுநீரகம

72.வில்லியம் ஹார்வி முதன்முதலில் இதை பற்றி கண்டறிந்து விளக்கினார்
அ)இரத்த சுழற்சி
ஆ)இரத்தத்தின் பண்புகள்
இ)இதயச் செயல்கள்
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்

73.இவற்றில் தவறான கூற்று எது?
அ)மனித இதயம் ஒர் உள்ளீடற்ற தசை நார் அமைப்புடைய உறுப்பாகும்
ஆ)இதயம் வட்ட வடிவம் அல்லது உருண்டை வடிவம் உடையது
இ)இதயத்தைச் சுற்றிலும் இரண்டடுக்குப் படலமாகிய பெரிகார்டியம் உறை அமைந்துள்ளது
ஈ)இதயத்திற்கும் பெரிகார்டியத்திற்கும் இடையில் உள்ள இடைவெளியில்
பெரிகார்டிய திரவம் நிரம்பி உள்ளது
விடை : ஆ)இதயம் வட்ட வடிவம் அல்லது உருண்டை வடிவம் உடையது

74.சுத்திகரிக்கப்ட்ட இரத்தம் என்பது?
அ)கார்பன் டை ஆக்ஸைடு மிக்க இரத்தம்
ஆ)ஆக்ஸிஜன் மிக்க இரத்தம்
இ)உப்பு அதிகம் கொண்ட இரத்தம்
ஈ)சர்க்கரை அதிகம் கொண்ட இரத்தம்
விடை : ஆ)ஆக்ஸிஜன் மிக்க இரத்தம்

75.மனித இதயத்தில் வலகு ஆரிக்குலொ-வெண்ட்ரிக்குலார் துணை எங்கு அமைந்துள்ளது?
அ)வலது ஆரிக்கிள் மற்றும் வலது வெண்ட்ரிக்களுக்கு இடையில் அமைந்துள்ளது
ஆ)இடது ஆரிக்கிள் மற்றும் இடது வெண்ட்ரிக்களுக்கு இடையில் அமைந்தள்ளது
இ)வலது ஆரிக்கிள் மற்றும் இடது வெண்ட்ரிக்களுக்கு இடையில் அமைந்துள்ளது
ஈ)இடது ஆரிக்கிள் மற்றும் வலது வெண்ட்ரிக்களுக்கு இடையில் அமைந்துள்ளது
விடை : அ)வலது ஆரிக்கிள் மற்றும் வலது வெண்ட்ரிக்களுக்கு இடையில் அமைந்துள்ளது

76.இவற்றில் எது இதயத்தில் இரத்தம் பின்னோக்கிச் செல்வதை தடுக்கின்றது?
அ)இடது வெண்டரிகிள்
ஆ)வலது ஆரிக்கிள்
இ)மிட்ரல் வால்வு
ஈ)பல்மோனரி வால்வு
விடை : இ)மிட்ரல் வால்வு

77.இவற்றில் பொருத்தமற்ற கூற்று எது?
அ)ஏட்ரியோ வெண்ட்டிரிகுலார் துளை மூவிதழ் வால்வினால் பாதுகாக்கப் படுகிறது
ஆ)ஆரிக்குலொ வெண்ட்டரிக்குலார் துணை ஈரிதழ் வால்வினால் பாதுகாக்கப்படுகிறது
இ)இடது வெண்ட்ரிக்கிள் பெருஞ்சிரை வால்வினால் பாதுகாக்கப்படுகிறது
ஈ)வலது பல்மோனா வால்வினால் பாதுகாக்கப்படுகிறது
விடை : இ)இடது வெண்ட்ரிக்கிள் பெருஞ்சிரை வால்வினால் பாதுகாக்கப்படுகிறது

78.சிஸ்டோல் என்பது
அ)இதயத்தின் அறை சுருங்கும் நிலை
ஆ)இதயத்தின் அறை விரிவடைதல்
இ)ஆரிக்கிளானது இரத்த பெறுதல்
ஈ)வெண்ட்ரிக்களிலிருந்து இரத்தம் வெளியேறுதல்
விடை : அ)இதயத்தின் அறை சுருங்கும் நிலை

79.ஒரு மனிதனின் சராசரி இதயத் துடிப்பு ஒரு நிமிடத்திற்கு---- துடிப்புகளாகும்
அ)52
ஆ)62
இ)72
ஈ)82
விடை : இ)72

80.இவற்றில் எது இரத்த குழாய் வகையை சேராதது?
அ)தமனி
ஆ)தந்துகி
இ)சிரை
ஈ)கார்டியாக்
விடை : ஈ)கார்டியாக்



No comments:

Post a Comment