SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Friday, July 29, 2016

33.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
1.சொற்கைள ஒழுங்குபடுத்திச்  சொற்றொடர் ஆக்குக
அ)எவ்வழி அவ்வழி குடிகள் அரசன்
ஆ)குடிகள் அரசன் அவ்வழி எவ்வழி
இ)அவ்விழி அரசன் எவ்வழி கடிகள்
ஈ)அரசன் எவ்வழி குடிகள் அவ்வழி
விடை : ஈ)அரசன் எவ்வழி குடிகள் அவ்வழி
2.சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடர் ஆக்குக
அ)கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை
ஆ)எட்டியது கைக்கு வாய்க்கு எட்டவில்லை
இ)கைக்கு எட்டியது எட்டவிலை;லை வாய்க்கு
ஈ)எட்டியது எட்டவில்லை வாய்க்கு கைக்கு
விடை : அ)கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை
3.சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடர் ஆக்குக
அ)மிஞ்சினால் அளவுக்கு அமுதமும் நஞ்சாகும்
ஆ)அளவுக்கு அமுதமும் மிஞ்சினால் நஞ்சாகும்
இ)அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சாகும்
ஈ)மிஞ்சினால் அளவுக்கு அமுதமும் நஞ்சாகும்
விடை : இ)அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சாகும்
4.சொற்கைள ஒழுங்குபடுத்திச் சொற்றொடர் ஆக்குக
அ)செல்வம் வாழ்வே நோயற்ற குறைவற்ற
ஆ)நோயற்ற செல்வம் குறைவற்ற வாழ்வே
இ)நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்
ஈ)குறைவற்ற வாழ்வே நோயற்ற செல்வம்
விடை : இ)நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்
5.சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடர் ஆக்குக
அ)பாய்ச்சலுக்கு அடையாளம் பதுங்குவது புலி
ஆ)பதுங்குவது புலி பாய்ச்சலுக்கு அடையாளம்
இ)புலி பதுங்குவது பாய்ச்சலுக்கு அடையாளம்
ஈ)பதுங்குவது புலி அiடாளம் பாய்ச்சலுக்கு
விடை : இ)புலி பதுங்குவது பாய்ச்சலுக்கு அடையாளம்
6.சொற்கைள ஒழுங்குபடுத்தி சொற்றொடர் ஆக்குக
அ)பயிரை மேய்ந்தால் வேலியே விளைவது எப்படி?
ஆ)எப்படி மேய்ந்தால் வேலியெ பயிரை விளைவது?
இ)மேய்தால் வேலியே பயிரை விளைவது எப்படி?
ஈ)வேலியே பயிரை மேய்ந்தால் விளைவது எப்படி?
விடை : ஈ)வேலியே பயிரை மேய்ந்தால் விளைவது எப்படி?
7.பெயர்ச்சொல்லின் வகையறிக - குதிரை
அ)இடைச்சொல்
ஆ)உரிச்சொல்
இ)பெயர்ச்சொல்
ஈ)வினைச்சொல்
விடை : இ)பெயர்ச்சொல்
8.பெயர்ச்சொல்லின் வகையறிக -மதுரை
அ)காலப்பெயர்
ஆ)தொழிற்பெயர்
இ)இடப்பெயர்
ஈ)சினைப்பெயர்
விடை : இ)இடப்பெயர்
9.பெயர்ச்சொல்லின் வகையறிக - வற்றல்
அ)சினைப்பெயர்
ஆ)குணப்பெயர்
இ)தொழிற்பெயர்
ஈ)காலப்பெயர்
விடை : இ)தொழிற்பெயர்
10.பெயர்ச்சொல்லின் வகையறிக - கார்த்திகை பிறந்தது
அ)காலப்பெயர்
ஆ)இடப்பெயர்
இ)மரபுப்பெயர்
ஈ)குணப்பெயர்
விடை : அ)காலப்பெயர்



No comments:

Post a Comment