SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Thursday, July 28, 2016

33.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
101.செல்லேன் என்ற விடைக்கு வினா தேர்க
அ)நீ ஊருக்கு எப்போது வருவாய்?
ஆ)நீ ஊருக்கு வருவாயா?
இ)நீ ஊருக்கு எப்போது செல்வாய்?
ஈ)நீ ஊருக்குச் செல்வாயா?
விடை : ஈ)நீ ஊருக்குச் செல்வாயா?
102.விடைக்கேற்ற வினாவைத் தேர்வு  செய்க - நேரு காந்தியடிகளைப் பின்பற்றினார்
அ)காந்தியடிகள் யாரைப் பின்பற்றினார்?
ஆ)நேரு காந்தியடிகளைப் பின்பற்றினாரா?
இ)காந்தியடிகளைப் பின்பற்றியவர் நேருவா?
ஈ)நேரு யாரைப் பின்பற்றினார்?
விடை : ஈ)நேரு யாரைப் பின்பற்றினார்?
103.எவ்வகை வாக்கியமெனக் குறிப்பிடுக- என்று தணியும் இந்தச் சுதந்திர தாகம் ?
அ)கட்டளை வாக்கியம்
ஆ)எதிர்மறை வாக்கியம்
இ)வினா வாக்கியம்
ஈ)உணர்சசி வாக்கியம்
விடை : இ)வினா வாக்கியம்
104.எவ்வகை வாக்கியமெனக் கண்டறிக
அறையின் கதவை மூடு
அ)உணர்ச்சி வாக்கியம்
ஆ)எதிர்மறை வாக்கியம்
இ)வினா வாக்கியம்
ஈ)கட்டளை வாக்கியம்
விடை : ஈ)கட்டளை வாக்கியம்
105.தன்வினை,பிறவினை,செய்வினை,செயப்பாட்டு வினை வாக்கியங்களைக் கண்டறிக கந்தன் செய்யுட்பாடம் கற்கிறான்
அ)பிறவினை
ஆ)எதிர்மறை வினை
இ)செயப்பாட்டு வினை
ஈ)தன்வினை
விடை : ஈ)தன்வினை
106.தன்வினை,பிறவினை,செய்வினை, செயப்பாட்டு வினை வாக்கியங்களைக் கண்டறிக
அ)செய்பினை
ஆ)பிறவினை
இ)செயப்பாட்டு வினை
ஈ)தன்வினை
விடை : இ)செயப்பாட்டு வினை
107.ஆசிரியர் பாடம் கற்பித்தார் - இது எவ்வகை வாக்கியம்
அ)பிறவினை வாக்கியம்
ஆ)கட்டளை வாக்கியம்
இ)தன்வினை வாக்கியம்
ஈ)உணர்ச்சி வாக்கியம்
விடை : இ)தன்வினை வாக்கியம்
108.காந்தி விடுதலை பெற உழைத்தாரா ? இது எவ்வகை வாக்கியம் ?
அ)செய்தி வாக்கியம்
ஆ)செய்வினை வாக்கியம்
இ)வினா வாக்கியம்
ஈ)உணர்ச்சி வாக்கியம்
விடை : இ)வினா வாக்கியம்
109.கபிலர் பாரியைக் கண்டு புகழ்ந்தது பாடிப் பரிசு பெற்றார் - இது எவ்வகை வாக்கியம்
அ)தனி வாக்கியம்
ஆ)செய்தி வாக்கியம்
இ)கலவை வாக்கியம்
ஈ)நெர்க்கூற்று வாக்கியம்
விடை : இ)கலவை வாக்கியம்
110.தன்வினை,பிறவினை,செய்வினை,செயப்பாட்டு வினை வாக்கியங்களைக் கண்டறிக - நளவெண்பா புகழேந்திப் புலவரால் பாடப்பட்டது
அ)செய்வினை வாக்கியம்
ஆ)தன்வினை வாக்கியம்
இ)பிறவினை வாக்கியம்
ஈ)செயப்பாட்டு வினை வாக்கியம்
விடை : ஈ)செயப்பாட்டு வினை வாக்கியம் 



No comments:

Post a Comment