361. விடை வகைகள்?
8
362. யாப்பெருங்கலக் காரிகையின் ஆசிரியர்?
அமிர்த சாகரர்
363. நான்கு சீர்கள் கொண்ட அடி?
அளவடி
364. ஓர் அடியில் நான்கு சீர்களிலும் இரண்டாம் எழுத்து ஒன்றி வரத் தொடுப்பது?
முற்று எதுகை
365. ஆசிரியப்பாவின் வேறு பெயர்?
அகவற்பா
366. செந்தமிழ் என்பது?
பண்புத் தொகை
367. மோர்க்குடம் என்பது?
இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கத் தொகை
368. வினை முற்றையோ, பெயர்ச் சொல்லையோ, வினைச் சொல்லையோ பயனிலையாகக் கொண்டு முடிவது?
முதல் வேற்றுமை
369. நீங்கல், ஒப்பு, எல்லை, ஏது என்னும் பொருளை உணர்த்தும் வேற்றுமை?
ஐந்தாம் வேற்றுமை
370. சொல்லின் செல்வர் எனப் பாராட்டப் பெற்றவர்?
ரா.பி.சேதுப்பிள்ளை
371. தொழிற்பெயர் _________ வகைப்படும்?
3
372. கவிப்பாவிற்குரிய ஓசை?
துள்ளல்
373. உமர்கய்யாம் பாடல்களைத் தமிழில் மொழி பெயர்த்தவர்?
கவிமணி
374. உலா, பரணி, பிள்ளைத் தமிழ் ஆகிய மூன்று வகைச் சிற்றிலக்கியங்களையும் பாடியவர்?
ஒட்டக்கூத்தர்
375. அர்த்தமுள்ள இந்து மதம் என்ற நூலை எழுதியவர்?
கண்ணதாசன்
376. தேவாரம் பாடிய மூவர்?
அப்பர், சம்பந்தர், சுந்தரர்
377. பெண்ணடிமை தீருமட்டும் பேசுந்திருநாட்டு மண்ணடிமை தூர்ந்து வருதல் முயற்கொம்பே என முழங்கியவர்?
பாரதிதாசன்
378. குறிஞ்சி நிலத்திற்குரிய பெரும்பொழுது?
யாமம்
379. முல்லை நிலத்திற்குரிய பெரும்பொழுது?
மாலை
380. மருதம் நிலத்திற்குரிய பெரும்பொழுது?
வைகறை
No comments:
Post a Comment