இந்திய வரலாறு
301. ஜசியா வரியை இந்துக்கள் மீது விதித்த தில்லி சுல்தான் யார்?
பெரோஸ் துக்ளக்
302. பெரோஸ் துக்ளக்கிற்;குப் பின்பு ஆட்சிக்கு வந்தவர் யார்?
முகமது கான்
303. முகமது கானை தொடர்ந்து ஆட்சிக்கு வந்தவர் யார்?
இரண்டாம் கியாசுதீன் துக்ளக்
304. இரண்டாம் கியாசுதீன் துக்ளக்கிற்;குப் அடுத்து ஆட்சிக்கு வந்தவர் யார்?
அபு பக்கர் ஷா
305. அபு பக்கர் ஷாவை தொடர்ந்து ஆட்சிக்கு வந்தவர் யார்?
நசுருதீன் முகமது
306. நசுருதீன் முகமதுவிற்குப் பின்பு ஆட்சிக்கு வந்தவர் யார்?
அலாவுதீன் சிக்கந்தர் ஷா
307. அலாவுதீன் சிக்கந்தர் ஷாவிற்குப் பின்பு ஆட்சிக்கு வந்தவர் யார்?
நசுருதீன் முகமது துக்ளக்
308. எந்த சுல்தான் ஆட்சியுடன் துக்ளக் மரபு ஆட்சி முடிவுக்கு வந்தது?
நசுருதீன் முகமது துக்ளக்
309. சையதுக்கள் மரபை தோற்றுவித்தவர் யார்?
கிசிரியர்கான்
310. சையதுக்கள் மரபின் கடைசி அரசர் யார்?
அலாவுதீன் ஆலம் ஷா
311. பஞ்சாப்பின் ஆளுநராக தைமூரால்; நியமிக்கப்பட்டவர் யார்?
கிசிர்கான்
312. தைமூரின் பெயரில் நாணயங்களை வெளியிட்டவர் யார்?
கிசிர்கான்
313. கிசிர்கான் தில்லியை ஆட்சி செய்த காலம் என்ன?
கி.பி. 1414 முதல் 1421 வரை
314. கிசிர்கான் எந்த ஆண்டு இறந்தார்?
கி.பி. 1421 மே 20
315. கிசிர்கானுக்கு பின்பு அரியணையேறியவர் யார்?
முபாரக் ஷா
316. முபாரக் ஷாவின் ஆட்சி காலம் என்ன?
கி.பி. 1421 முதல் 1434 வரை
317. முபாரக்ஷா என்பவர் யார்?
கிசிர்கானின் மகன்
318. முய்சுதீன் முபாரக் என்று தனது பெயரில் நாணயம் வெளியிட்ட சுல்தான் யார்?
முபாரக்ஷா
319. முபாரக் ஷாவின் ஆட்சியைப் பற்றிக் கூறும் நூல் எது?
தாரிக்-இ-முபாரக் ஷாகி
320. முபாரகாபாத் என்ற நகரை நிர்மானித்தவர் யார்?
முபாரக் ஷா
No comments:
Post a Comment