621. பனிக்கரடிகள் அனைத்தும் இடது கை வழக்கமுடையவை
622. முதலைகளால் நாக்கினை வெளியே நீட்ட இயலாது அறிவியல் சார்ந்த சுவாரஸ்யமான அறிவியல் தகவல்கள்
623. புலியே தாக்க பயப்படும் விலங்கு - காட்டு எருமை
624. வாலில்லாத பூனைகளின் பெயர் மாங்க்ஸ் (Manx)
625. ராட்ஷச பாண்டாவின் முக்கிய உணவு மூங்கில் கிளைகள்
626. முள்ளம்பன்றி விரும்பி சாப்பிடும் உணவு உதிர்ந்த மான் கொம்புகள்
627. உலகின் மக பெரிய கங்காரு - சிவப்பு கங்காரு
628. எதிரிகள் பயமுறுத்தும் போது மயங்கிவிழும் விலங்கு - அப்போசம் (ஒருவகையான எலி )
629. ட்ரே என்னும் கூண்டுகளில் வாழ்பவை அணீல்கள்
630. மிக குறைவான ஆயுட்காலத்தை உடையது - ஈ
631. மிக மெதுவாக இயங்கும் பாலூட்டி - தேவாங்கு
632. எலும்பு கூடு இல்லாத விலங்கு - ஜெல்லி மீன்
633. கனவாய் மீனுக்கு (Cuttlefish) மூன்று இதயங்கள்...!
634. கனவாய் (Cuttlefish) எனப்படும் மீன் இனத்திற்கு தான் அந்த சிறப்பு. கடல் விலங்குகளில் இது ராஜா எனவும் கருதப்படுகிறது. இந்த மீன், ஸ்குவிட் மற்றும் ஆக்டோபஸ் குடும்பத்தை சார்ந்ததாகும். இதனை செப்பலோபாட்ஸ் எனவும் அழைக்கின்றனர்.
635. மேலும் கனவாய் மீனுக்கு மிகப் பெரிய இதயம் உள்ளது, உண்மையில் இதற்கு ஒரு இதயம் அல்ல மூன்று இதயங்கள். இரண்டு இதயங்கள் செவுள்களுக்கு (Gills) ரத்தத்தை பம்ப் செய்யவும், மூன்றாவது இதயம் பிற உறுப்புகளுக்கு (Organs) பம்ப் செய்யவும் பயன்படுத்துகிறது.
636. இந்த மீனின் அங்கம் தட்டையாக இருப்பதால் கடலில் வாழ்வதற்கு தோதாக உள்ளது. இவை மொலஸ்க்ஸ் மற்றும் சிறிய மீன்களை வேட்டையாடக்கூடியது. கனவாய் மீன்கள் பிற இனத்தின் மீன்களிடம் இருந்து தன்னைக் காத்துக்கொள்ள தன் நிறத்தை பின்புல நிறத்திற்கு ஏற்ப மாற்றும் இயல்புடையது.
637. நீல நிற இரத்தம் கனவாய் மீனின் ரத்தத்தில் காப்பர் அதிகமாக இருப்பதால் ரத்தத்தின் நிறம் பச்சையும் நீலமும் கலந்த நிறமாக தோன்றும். இதன் காரணமாகவே இதை ராஜா மீன் என்கின்றனர்.
638. தன் நிறமிப் பையை சரிப்படுத்துவதன் மூலம் தன் நிறத்தை இதனால் மாற்ற முடிகிறது. நிறமி பைகள் சிறியவை, ஆனாலும் பல வண்ணங்களை கொண்டு காணப்படுகிறது. எதிரி மீன்கள் தன்னை தாக்கும்போது கருப்பு நிற திரவத்தை வெளியிட்டு தாக்கும் இனத்திடம் இருந்து தற்காலிகமாக தப்பிக்கும் தந்திரம் உடையது இந்த கனவாய் மீன்கள்.
639. பூமியில் உள்ள 97 சதவீதம் உப்பு தண்னீரால் ஆனது, மீதமுள்ள 3 சதவீதம் தூய்மையான நீர் என குறிப்பிடப்படுகிறது. அவற்றில் 2 சதவீதம் பனிக்கட்டிகளாகவும் பனிப்பாறைகளாகவும் காணப்படுகிறது. இதன் மூலம் 3 இல் 1 சதவீதம் தூய்மையான தண்ணீர் தான் ஆறுகள், ஏரிகள் மற்றும் பூமிக்கு அடியிலும் காணப்படுகிறது.
640. * பூமியின் பரப்பளவில் 10 இல் ஒரு (1/10) பங்கு பனிக்கட்டிகளால் ஆனது. மேலும் பனிக்கட்டிகளின் 90 சதவீதம் அண்டார்டிகாவைச் சார்ந்தே இருக்கிறது, ஆயினும் அங்குள்ள எரிபஸ் (Erebus) என்ற எரிமலை புகையை வெளியிட்டு வருகிறது. பனிக்கட்டியின் மீதமுள்ள 10 சதவீதம் பனிப்பாறைகளாகக் காணப்படுகிறது.
No comments:
Post a Comment