SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Friday, July 8, 2016

31.general tamil study material

321."சேய்" – பொருள் தருக?
தூரம்
322. "செய்" – பொருள் தருக?
வயல்
323. மூவலூர் ராமாமிர்தம் பிறந்த ஆண்டு?
1883
324. உயிர்மெய் நெடில் எழுத்துக்கள் எத்தனை?
126
325. "புதிய விடியல்கள்" என்ற நூலை எழுதியவர்?
தாரா பாரதி
326. "அவல்" – பொருள் தருக?
பள்ளம்
327. "மக்கள் கவிஞர்" என்றழைக்கப்படுகின்றவர்?
கல்யாண சுந்தரம்
328. மூவினம், மூவிடம், முக்காலம், மூவுலகம் – பொருத்தம் இல்லாதது எது?
மூவிடம்
329. நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் – அகர வரிசைப்படுத்துக?
ஆகாயம், காற்று, நிலம், நீர், நெருப்பு
330. திருக்குறள் எத்தனை மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது?
107
331. ஹிந்தி செம்மொழி இல்லை. சரியா? தவறா?
சரி
332. "மதுரை" என்ற பெயர் முக்காலத்தில் கல்வெட்டில் எவ்வாறு வந்தது?
மதிரை
333. ஈச்சந்தட்டை-பிழைத் திருத்தம் செய்க?
ஈச்சந்தட்டு
334. யானை, கரும்பு இச்சொற்களைக் குறிக்கும் சொல்?
வேழம்
335. "முயற்சி செய்" – எத்தொடர் எனக் கூறுக?
கட்டளைத் தொடர்
336. பாரதிதாசனின் இயற்பெயர்?
கனக சுப்புரத்தினம்
337. "அகரம் + ஆதி" – சேர்த்தெழுதுக?
அகராதி
338. "பைங்குவளை" – பிரித்தெழுதுக?
பசுமை + குவளை
339. தமிழ் எழுத்துக்களை எழுதவும், ஒலிக்கவும் கற்றுத் தரும் இணையதளம்?
தமிழகம்
340. "கயல்விழி" என்பது?
உவமைத் தொகை




No comments:

Post a Comment