இந்திய வரலாறு
141. கார்வாஸ் ஆலயம் எங்கு உள்ளது?
அலகாபாத்தில்
142. குப்தர் காலத்தில் உருவாக்கப்பட்ட நிற்கும் வடிவில் உள்ள அழகிய புத்தர் சிலை எங்கு உள்ளது?
மதுராவில்
143. பிடாரி என்ற இடத்தில் உள்ள ஒற்றைக் கல்தூணை உருவாக்கியவர் யார்?
ஸ்கந்த குப்தர்
144. செம்பாலான புத்தர் சிலை முதன் முதலில் எங்கு கண்டெடுக்கப்பட்டது?
சுல்தான் கன்ச்
145. செம்பாலான புத்தர் சிலை தற்போது எங்கு உள்ளது?
இங்கிலாந்து பக்கிம்ஹாம் அருங்காட்சியகத்தில்
146. செம்பாலான புத்தர் சிலையின் உயரம் எவ்வளவு?
7½ அடி
147. செம்பாலான புத்தர் சிலையின் எடை எவ்வளவு?
1 டன்
148. குப்தர் கால உலோக கலைக்கு —— மற்றும் ——சிறந்த எடுத்துக்காட்டு ஆகும்.
சுல்தான்கஞ்ச் புத்தர் சிலைஇ தில்லியில் உள்ள இரும்புத்தூண்
149. பாக் குகை ஓவியம் ——— காலத்தைச் சார்ந்தது.
குப்தர் காலத்தை
150. அஜந்தா குகை ஓவியம் எந்த மாநிலத்தில் உள்ளது?
மகாராஷ்டிரா
151. அஜந்தாவில் உள்ள குகை ஓவியங்களில் எந்த நம்பரை உடைய குகை ஓவியம் குப்தர் காலத்தைச் சார்ந்தது?
16இ 17 மற்றும் 19
152. அஜந்தாவில் உள்ள 16 வது குகை ஓவியத்தில் —— மற்றும்——ஓவியம் புகழ்பெற்றது.
சாவின் மடியில் இளவரசிஇ தாயும் சேயும்
153. புத்தரின் பிறப்புஇ இறப்பு மற்றும் வாழ்க்கை சித்தரிக்கும் ஓவியம் அஜந்தாவில் எந்த நம்பர் குகையில் இடம் பெற்றுள்ளது.
17 வது நம்பர் குகையில்
154. இலங்கையில் உள்ள ———— ஓவியம் அஜந்தாவின் ஓவியத்தை பிரதிபலிக்கின்றது.
சிகிரியா ஓவியம்
155. பெண்கள் மலர்களை கையில் ஏந்திக் கொண்டு பௌத்த கோவிலுக்கு செல்லும் காட்சி எங்கு இடம் பெற்றுள்ளது?
இலங்கை சிகிரியா ஓவியத்தில்
156. சாகுந்தலம் என்ற நாடக நூலை இயற்றியவர் யார்?
காளிதாசர்
157. காளிதாசரின் படைப்புக்களில் மிகச் சிறந்த நூல் எது?
சாகுந்தலம்
158. மாளவி காக்னிமித்திரம் என்ற நாடக நூலை படைத்தவர் யார்?
காளிதாசர்
159. மாளவி காக்னிமித்திரம் என்பது ——— நூல் ஆகும்.
வரலாற்று நூல்
160. மாளவி காக்னிமித்திர நூலின் நாயகன் யார்?
அக்னிமித்திரர்
No comments:
Post a Comment