SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Wednesday, July 20, 2016

31.விலங்கியல் வினா – விடைகள் மனித உடல் உறுப்பு மண்டலங்களின் அமைப்பும் செயல்பாடுகளும்

விலங்கியல் வினா விடைகள்  மனித உடல் உறுப்பு மண்டலங்களின் அமைப்பும் செயல்பாடுகளும்
21.ஆம்னியான் என்பது
அ)கருப்பை
ஆ)கலவிக் கால்வாய்
இ)பனிக்குடம்
ஈ)தொப்புள் கொடி
விடை : இ)பனிக்குடம்

22.குழந்தை பிறப்பின் துவக்கமாக இந்த ஹார்மோனின் செயலால் கருப்பை சீராக துவங்குகிறது
அ)புரோஜெஸ்டிரோன்
ஆ)ஈஸ்ட்ரோஜன்
இ)லூட்டினைசிங்
ஈ)ஆக்ஸிடோசின்
விடை : ஈ)ஆக்ஸிடோசின்

23.தாய்ப்பாலில் இருக்கும் ….. என்ற புரதம் குடல் மற்றும் சுவாச தொற்றி லிருந்து குழந்தையை பாதுகாக்கிறது
அ)வேக்டோபெரின்
ஆ)குளுக்கோஸ்
இ)கிளிசரால்
ஈ)அமினோ அமிலங்கள்
விடை : அ)வேக்டோபெரின்

24.நியூரான்கள் என்பது
அ)நரம்பு இழை
ஆ)நரம்பு நீ;ட்சி கற்றை
இ)நரம்பு செயல் அலகு
ஈ)நரம்பு தூண்டல்
விடை : இ)நரம்பு செயல் அலகு

25.இவற்றில் எது நரம்பு பகுதியில்லை
அ)செல் உடலம்
ஆ)டென்டிரைட்டுகள்
இ)அடினோ ஹைப்போ
ஈ)ஆக்ஸான்
விடை : இ)அடினோ ஹைப்போ

26.இவற்றில் பொருத்தமான இணை எது
அ)செல் உடலம் - மெடன்டிரைட்டுகள்
ஆ)குட்டை இழைகள் - சைட்டான்
இ)ஆக்ஸான மையல் உறை ரன்வீரின் கணுக்கள்
ஈ)நரம்பு செல் இடைவெளி நியூரான்
விடை : இ)ஆக்ஸான மையல் உறை ரன்வீரின் கணுக்கள்

27.நரம்பில் …. செல் உடலை நோக்கி மின்தூண்டல்களை கடத்துகின்றன
அ)டென்டிரைட்டுகள்
ஆ)ஸ்சுவான்
இ)சைட்டான்
ஈ)ஆக்ஸான்
விடை : அ)டென்டிரைட்டுகள்

28.மையலின் உறை அற்ற நியூரான்கள் எனபது
அ)மெடுல்லோட்டட் அற்ற நியூரான்கள்
ஆ)சாம்பல் நியூரான்கள்
இ)மெடுல்லோட்டட் அல்லது வெண்மை நியூரான்கள்
ஈ)அ மற்றும் ஆ சரி
விடை : ஈ)அ மற்றும் ஆ சரி

29.பெருமூளை புறணியில் உள்ளவை
அ)ஒருமுளை நியூரான்கள்
ஆ)இருமனை நியூரான்கள்
இ)மும்முனை நியூரான்கள்
ஈ)பலமுனை நியூரான்கள்
விடை : ஈ)பலமுனை நியூரான்கள்

30.மனித நரம்பு மண்லத்தின் முக்கிய பகுதி
அ)மைய நரம்பு மண்டலம்
ஆ)புற அமைவு நரம்பு மண்டலம்
இ)தானியங்கு நரம்பு மண்டலம்
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும் 



No comments:

Post a Comment