SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Saturday, July 16, 2016

31.விடைக்கெற்ற வினாவைத் தேர்ந்தெடுத்தல்

விடைக்கெற்ற வினாவைத் தேர்ந்தெடுத்தல்
1.விடைக்கேற்ற வினாவைத் தேர்வு செய்
தமிழ் இலக்கணம் ஐந்து வகைப்படும்
அ)தமிழில் இலக்கணம் உண்டா?
ஆ)தமிழ் இலக்கணம் என்றால் என்ன?
இ)தமிழ் இலக்கணம் எத்தனை வகைப்படும்?
ஈ)தமிழ் எத்தனை வகைப்படும்?
விடை : இ)தமிழ் இலக்கணம் எத்தனை வகைப்படும்?

2.விடைக்கேற்ற வினாவைத் தேர்வு செய்
உப்பிட்டவரை உள்ளளவும் நினைக்க வேண்டும்
அ)எதை உள்ளளவம் நினைக்க வேண்டும்?
ஆ)எதனை உள்ளளவும் நினைக்க வேண்டும்?
இ)எப்பொழுது உள்ளவும் நினைக்க வேண்டும்?
ஈ)யாரை உள்ளளவும் நினைக்க வேண்டும்?
விடை : ஈ)யாரை உள்ளளவும் நினைக்க வேண்டும்?

3.விடைக்கேற்ற வினாவைத் தேர்வு செய்
காலில் புண் இருந்தது
அ)கால் எங்கே இருந்தது?
ஆ)காலில் பண்ணா இருந்தது?
இ)காலில் புண்ணா இருந்தது?
ஈ)புண் எங்கே இருந்தது?
விடை : ஈ)புண் எங்கே இருந்தது?

4.விடைக்கேற்ற வினாவைத் தேர்வு செய்
கோபால் இதயம் விசாலமானது
அ)என் இதயம் எப்படிப்பட்டது?
ஆ)அவன் இதயம் விசாலமானதா?
இ)இதயம் என்றால் என்ன?
ஈ)யார் இதயம் விசாலமானது
விடை : ஈ)யார் இதயம் விசாலமானது

5.விடைக்கேற்ற வினாவைத் தேர்வு செய்
உழைத்தவர் பிழைப்பார்
அ)உழைத்தவர் பிழைப்பபரா?
ஆ)யார் பிழைப்பார்?
இ)பிழைக்க என்ன செய்ய வேண்டும்?
ஈ)பிழைக்க உழைக்க வேண்டும்?
விடை : ஆ)யார் பிழைப்பார்?

6.விடைக்கேற்ற வினாவைத் தேர்வு செய்
நாலடியார் நீதி நூலேயாயினும் இலக்கியச் சுவையும் கொண்டது'
அ)நாலடியார் எப்படிப்பட்ட நூல்?
ஆ)நாலடியாரை இயற்றியவர் யார்?
இ)நாலடியார் விளக்கம் தருக?
ஈ)நாலடி என்றால் என்ன?
விடை : அ)நாலடியார் எப்படிப்பட்ட நூல்?

7.விடைக்கேற்ற வினாவைத் தேர்வு செய்
குமரன் பாடம் படித்தான்
அ)குமரன் பாடம் படித்தான்?
ஆ)குமரன் என்ன படித்தான்?
இ)குமரன் எங்கு படித்தான்?
ஈ)குமரன் ஏன் படித்தான்?
விடை : ஆ)குமரன் என்ன படித்தான்?

8.விடைக்கேற்ற வினாவைத் தேர்வு செய்
கண்ணன் தேர்வை நன்றாக எழுதினான்
அ)கண்ணன் தேர்வு எழுதினானா?
ஆ)கண்ணன் என்ன எழுதினான்?
இ)கண்ணன் எதை எழுதினான்?
ஈ)கண்ணன் தேர்வை எப்படி எழுதினான்?
விடை : ஈ)கண்ணன் தேர்வை எப்படி எழுதினான்?

9.விடைக்கேற்ற வினாவைத் தேர்வு செய்
ஐம்பபெருங் காப்பியங்களுள் முதன்மை யானது சிலப்பதிகாரமாகும்
அ)ஐம்பபெருங் காப்பியங்கள் யாவை?
ஆ)சிலப்பதிhகரம் மக்கள் காப்பியமா?
இ)ஐம்பெருங் காப்பியங்களில் முதன்மை யானது எது?
ஈ)முதன்மை வாய்ந்தது சிலப்பதிகாரமா?
விடை : இ)ஐம்பெருங் காப்பியங்களில் முதன்மை யானது எது?

10.விடைக்கேற்ற வினாவைத் தேர்வு செய்
மாதங்களில்சிறந்தது மார்கழி
அ)மாதங்கள் எத்தனை?
ஆ)மார்கழி மாத்தில் எத்தனை நாட்கள்?
இ)மாதங்களில் சிறந்தது எது?
ஈ)மார்கழி எவ்வாறு சிறந்தது?
விடை : இ)மாதங்களில் சிறந்தது எது?



No comments:

Post a Comment