SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Sunday, July 17, 2016

2.எதுகை,மோனை,இயைபு,இவற்றுள் ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுத்தல்

எதுகை,மோனை,இயைபு,இவற்றுள் ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுத்தல்
11.அமைந்தாங் கொழுகான் அளவறியான் தன்னை வியந்தான் விரைந்து கெடும் இவற்றில் பொழிப்பு மோனை எது?
அ)அமைந்தாங் - கொழுகான்
ஆ)அளவறியான் - தன்னை
இ)அமைந்தாங் - அளவறியான்
ஈ)வியந்தான் - விரைந்து
விடை : இ)அமைந்தாங் – அளவறியான்

12.ஒண்பொருள் காழ்ப்ப இயற்றியார்க் கெண்பொருள்
ஏனை யிரண்டும் ஒருங்கு இவற்றில் ஒரூஉ எதுகை எது?
அ)காழ்ப் - ஒருங்கு
ஆ)ஒண்பொருள் - கெண்பொருள்
இ)ஒண்பொருள் - யிரண்டும்
ஈ)இயற்றியார்க் - கெண்பொருள்
விடை : ஆ)ஒண்பொருள் – கெண்பொருள்

13.நன்றி மறப்பது நன்றன்று நன்றல்ல அன்றே மறப்பது நன்று
இத்திருக்குறளில் வந்துள்ள எதுகை மோனை வரிசையை குறிப்பிடுக
அ)கீழ்க்கதுவாய் எதுகை மேற்கதுவாய் மோனை
ஆ)கூழை எதுகை கூழை மோனை
இ)மேற்கதுவாய் மோனை மேற்கதுவாய் எதுகை
ஈ)கீழ்க்கதுவாய் மோனை,கீழ்க்கதுவாய் எதுகை
விடை : ஈ)கீழ்க்கதுவாய் மோனை,கீழ்க்கதுவாய் எதுகை

14.கீழ்க்காணும் அடிகளில் காணப்பெறும் இயைபினைக் காண்க
'எங்கள் தந்தையர் நாடென்ற பேச்சினிலே ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே
அ)எங்கள் பேச்சினிலே
ஆ)எங்கள் - சக்தி
இ)பேச்சினிலே - மூச்சினிலே
ஈ)பேச்சினிலே பிறக்குது
விடை : இ)பேச்சினிலே – மூச்சினிலே

15.மோனையினைக் கண்டறிக
இரு மனங்கள் கலக்கின்ற திருமணத்தில இன்பத்தின் மழைபொழயும் முகமிருக்கும்
அ)இருமனம் - இன்பம்
ஆ)கலக்கும் - இருமனம்
இ)கலக்கும் - திருமணம்
ஈ)இன்பம் - மழைபொழியும்
விடை : இ)கலக்கும் – திருமணம்

16.அடி மோனை கண்டறிக
'சமுதாயம் திருந்திடவும் வேண்டும் சமுதாயம் மலர்ந்திடவும் வேண்டும்"
அ)சமுதாயம் - மலர்ந்திட
ஆ)சமுதாயம் - திருந்திட
இ)சமுதாயம் - சமுதாயம்
ஈ)சமுதாயம் - வேண்டும்
விடை : இ)சமுதாயம் – சமுதாயம்

17.எதுகைத் தொடையைத் தேர்ந்தெழுதுக
உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கண் - நட்பு
அ)உடுக்கை - இதந்தவன்
ஆ)உடுக்கை - இழந்தவன்
இ)உடுக்கை - இடுக்கண்
ஈ)இடுக்கண் - நட்பு
விடை : இ)உடுக்கை – இடுக்கண்

18.எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் - எதுகை தேர்க
அ)வளம் - வாழ்வு
ஆ)எங்கள் - எங்கள்
இ)வாழ்வு எங்கள்
ஈ)எங்கள் - வாழ்வு
விடை : ஆ)எங்கள் – எங்கள்

19.கீழ்க்கண்டவற்றுள் மோனைத் தொடர் எது?
அ)மாமதுரைக் கோபுரங்கள்
ஆ)பாடுபட்டவன் பாட்டாளி
இ)ஆடுவோமே பள்ளு பாடுவோமே
ஈ)அறத்தான் வருவதே இன்பம்
விடை : ஆ)பாடுபட்டவன் பாட்டாளி

20.கீழ்வரும் தொடரில் இயையைக் குறிப்பிடு:
சாதியெனும் சாக்கடையில் புழப்போல் வாழ்ந்து
சமயவெறிச் சழக்குளில் தடுமாறி வீழ்ந்து
அ)சாதியெனும் - புழப்போல்
ஆ)சாதியெனும் - சமய வெறி
இ)சம வெறி சழக்குகளில்
ஈ)வாழ்ந்து வீழ்ந்து
விடை : ஈ)வாழ்ந்து வீழ்ந்து



No comments:

Post a Comment