இந்திய வரலாறு
201. மாலிக்காபூர் கி.பி. 1307 -இல் தேவகிரி மீது படையெடுத்து யாரை வெற்றி கொண்டார்?
இராம சந்திர தேவர்
202. மாலிக்காபூர் குஜராத் மீது வெற்றி கொண்டு தில்லிக்கு அழைத்து சென்ற பெண் யார்?
தேவல தேவி (கர்ணதேவரின் மகள்)
203.மாலிக்காபூர் கி.பி.1309- இல் வாராங்கல் மீதுப்படையெடுத்து யாரை வெற்றி கொண்டார்?
இரண்டாம் பிரதாப ருத்திரன்
204. மாலிக்காபூர் கி.பி.1310 இல் துவார சமுத்திரம் மீது படையெடுத்து எப்பகுதி மன்னரை வெற்றிக் கொண்டார்?
ஹய்சாள அரசர் மூன்றாம் வீரவல்லாலர்
205. மாலிக்காபூரிடம் யார் உதவி கோரியதால் மதுரைக்கு வந்தார்?
சுந்தர பாண்டியன்
206. மாலிக்காபூர் மதுரைக்கு எந்த ஆண்டு வந்தார்?
கி.பி. 1311 ஏப்ரல் 14
207. மதுரையை கொல்லையடித்த மாலிக்கபூர் அங்கிருந்து எங்கு சென்றார்?
இராமேஸ்வரம் வரை
208. இராமேஸ்வரத்தில் மாலிக்கபூர் யாருடைய பெயரில் மசூதி நிறுவினார்?
அலாவுதீன் பெயரில்
209. அலாவுதீன் கில்ஜி எந்த பொருளுக்கு தடைவிதித்தார்?
போதை பொருட்கள்
210. அலாவுதீன் கில்ஜி நிலவரி எவ்வளவு வசூலித்தார்?
மகசூலில் பாதியளவு
211. நிலையான படையை முதன் முதலில் ஏற்படுத்திய தில்லி சுல்தான் யார்?
அலாவுதீன் கில்ஜி
212. படைவீரர்களின் பட்டியலை முதன் முதலில் தயாரித்த தில்லி சுல்தான் யார்?
அலாவுதீன் கில்ஜி
213. அலாவுதீன் குதிரைப்படையில் ஏற்படுத்தியப் புதுமை யாவை?
குதிரைக்கு சூடுபோடுதல்
214. குதிரைக்கு சூடு போடும் முறைக்கு பெயர் என்ன?
"தாக்"
215. அலாவுதீன் கில்ஜி வியாபாரத்தில் கொண்டு வந்தப் புதுமை என்ன?
அங்காடி சீர்திருத்தம் (உழவர் சந்தை)
216. சகானா-இ-மண்டி என்ற புதிய வணிகத் துறையை ஏற்படுத்திய தில்லி சுல்தான் யார்?
அலாவுதீன் கில்ஜி
217. தில்லிக்கு அருகில் சிரி என்ற நகரை நிர்மாணித்த தில்லி சுல்தான் யார்?
அலாவுதீன் கில்ஜி
218. "ஜாகிர்" முறையை ஒழித்த தில்லி சுல்தான் யார்?
அலாவுதீன் கில்ஜி
219. அலாவுதீன் கில்ஜியால் கட்டப்பட்ட மசூதியின் பெயர் என்ன?
அலைந்தர் வாஷா
220. அலாவுதீன் கில்ஜி நிலங்களை அளந்து ——— வரிவிதிப்பைக் கொண்டு வந்தார்.
முறையான
No comments:
Post a Comment