241. தமிழில் தோன்றிய முழுமுதற் காப்பியம் எது?
சிலப்பதிகாரம்
242. குமரகுருபரர் இயற்றிய நூல்?
நீதி விளக்கம்
243. பெண்பாற் பிள்ளைத் தமிழின் பருவங்கள்?
10
244. "பக்திச் சுவை நனி சொட்டச் சொட்டப் பாடிய கவிவலவன்" எனப் பாராட்டப்படுபவர்?
சேக்கிழார்
245. நாலடியாரை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர்?
ஜி.யூ.போப்
246. ஆரிய அரசன் பிரகத்தனுக்கு தமிழ் அறிவுறுத்தற்குப் பாடிய பாட்டு?
குறிஞ்சிப் பாட்டு
247. நேரிசையாசிரியப் பாவின் ஈற்றயலடி?
முச்சீர்
248. வெண்பாவின் வகைப்பாடு?
6
249. புறத்தினை வகைப்பாடு?
12
250. மக்கள் கவிஞர் என்றழைக்கப்படுபவர்?
பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம்
251. "நிறை ஒழுக்கம்"-இச்சொற்றொடரின் இலக்கணம்?
வினைத் தொகை
252. "பாடாக் குயில்"-இச்சொல் காட்டும் இலக்கணம்?
ஈறுக்கெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
253. "நீராருங் கடலுடுத்த" என்ற தமிழ்த்தாய் வாழ்த்து பாடியவர்?
"மனோன்மணீயம்" பெ.சுந்தரனார்
254. "ஜன கண மண" எனும் தேசிய கீதம் பாடியவர்?
இரவீந்தரநாத் தாகூர்
255. "செந்தமிழ் நாடெனும் போதினிலே" என்ற பாடலை இயற்றியவர்?
மகாகவி பாரதியார்
256. திருவருட்பாவை இயற்றியவர்?
இராமலிங்க அடிகளார்
257. "திருவருட்பிரகாச வள்ளலார்" என்னும் சிறப்பு பெயர் பெற்றவர்?
இராமலிங்க அடிகளார்
258. இராமலிங்க அடிகளார் பிறந்த ஊர்?
கடலூர் மாவட்டம் மருதூர்
259. இராமலிங்க அடிகளாரின் பெற்றோர்?
இராமையா-சின்னம்மையார்
260. இராமலிங்க அடிகளார் எழுதிய நூல்கள் எவை?
ஜீவகாருண்ய ஒழுக்கம், மனுமுறை கண்ட வாசகம்
No comments:
Post a Comment