SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Friday, July 8, 2016

26.tnpsc question model

221. பாலை நில மக்களின் பாட்டு?
வேட்டுவவரி
222. செம்மொழியாக உயர்த்தப்பட்டுள்ள தமிழ்மொழி, செம்மொழி தரவரிசையில் எத்தனையாவது இடத்தைப் பெற்றுள்ளது?
எட்டாவது இடம்
223. "தமிழ் நெடுங்கணக்கு" என்று சூட்டப்படுவது?
தமிழ் எழுத்துக்கள்
224. சிந்து, வைகை, யமுனை, கங்கை – அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க?
கங்கை, சிந்து, யமுனை, வைகை
225. அடிதோறும், சீர்தோறும் இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது?
எதுகை
226. "கொன்றை வேந்தன்" என்ற நூலின் ஆசிரியர் யார்?
ஒளவையார்
227. "கரி" எனும் சொல் உணர்த்துவது?
யானை
228. மயங்கொலி எழுத்துக்களின் எண்ணிக்கை?
8
229. சிங்கத்தின் இளமைப் பெயர்?
குருளை
230. "யாதும் ஊரே யாவரும் கேளிர்" எனப் பாடியவர்?
கனியன் பூங்குன்றனார்
231. தமிழின் மிகப்பழமையான இலக்கண நூல்?
தொல்காப்பியம்
232. "தழல்" எனும் சொல்லின் பொருள்?
நெருப்பு
233. "ஏறு போல் நட" எனக் கூறும் இலக்கியம்?
புதிய ஆத்திச்சூடி
234. "திணை" எனும் சொல்லின் பொருள்?
ஒழுக்கம்
235. கவிமணி எழுதிய நூல்கள்?
மலரும் மாலையும், உமர்கய்யாம் பாடல்கள், ஆசிய ஜோதி
236. "தணித்தல்" என்பதன் பொருள் என்ன?
குறைத்தல்
237. முகர்ந்து பார்த்தாலே வாடும் மலர்?
அனிச்சம்
238. பத்துப்பாட்டு நூல்களில் அகமா? புறமா? என்ற சர்ச்சைக்குரிய நூல் எது?
நெடுநல்வாடை
239. "குடவோலை முறை" பற்றிய குறிப்பினைக் கொண்ட சங்க நூல் எது?
அகநானூறு
240. "சங்கம்" என்ற சொல்லை முதன் முதலில் வழங்கிய நூல்?
மணிமேகலை




No comments:

Post a Comment