இந்திய வரலாறு
161. பால்பனின் ஆட்சி காலத்தில் எந்தெந்த ஆண்டுகளில் மங்கோலிய படையெடுப்பு நடைபெற்றது?.
கி.பி. 1271, 1279, 1285, 1286
162. மங்கோலிய படைகளுடன் நடந்த போரில் இறந்த பால்பனின் மகன் பெயர் என்ன?
முகமது
163. திறமையான ஒற்றர் முறையை அமைத்த அடிமை வம்ச சுல்தான் யார்?
பால்பன்
164. பால்பன் எந்த ஆண்டு இறந்தார்?
கி.பி. 1287 - இல்
165. பால்பனை தொடர்ந்து ஆட்சிக்கு வந்தவர் யார்?
கைக்குபாத்
166. கைக்கு பாத் என்பவர் யார்?
முகமதுவின் மகன்
167. கைக்குபாத் யாரால் கொலை செய்யப்பட்டார்?
ஜலாலுதினால்
168. கைக்கு பாத்தின் மூன்று வயது மகனின் பெயர் என்ன?
கயூமார்
169. கைக்கு பாத்தால் உருவாக்கப்பட்ட நகரின் பெயர் என்ன?
கிலோக்கிரி
170. அடிமை வம்சத்தின் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்தவர் யார்?
ஜலாலுதீன்
171. கைக்கு பாத் எந்த ஆண்டு கொலை செய்யப்பட்டார்?
கி.பி. 1290
172. கில்ஜி வம்சத்தை தோற்றுவித்தவர் யார்?
ஜலாலுதீன் கில்ஜி
173. ஜலாலுதீன் கில்ஜி எந்த ஆண்டில் இருந்து எந்த ஆண்டு வரை ஆட்சி செய்தார்?
கி.பி. 1290 முதல் கி.பி. 1296 வரை
174. ஜலாலுதீன் கில்ஜி மங்கோலியர்களை தோற்கடித்தப் பின்பு அவர்களை எங்கு தங்கி வாழ அனுமதியளித்தார்?
தில்லிக்கு அருகில்
175. தில்லிக்கு அருகில் வாழ்ந்த மங்கோலியர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்?
புதிய முஸ்லீம்கள்
176. ஜலாலுதீன் கில்ஜியின் மருமகன் பெயர் என்ன?
அலாவுதீன் கில்ஜி
177. அலாவுதீன் கில்ஜி எப்பகுதியின் ஆளுநராக நியமிக்கப்பட்டார்?
காரா
178. அலாவுதீன் கில்ஜியால் தோற்கடிக்கப்பட்ட தேவகிரி மன்னர் யார்?
இராமசந்திர தேவர்
179. ஜலாலுதீன் கில்ஜி யாரால் கொலை செய்யப்பட்டார்?
அலாவுதீன் கில்ஜியால்
180. ஜலாலுதீன் கொலை செய்யப்பட்;ட ஆண்டு என்ன?
கி.பி. 1296
No comments:
Post a Comment