இந்திய வரலாறு
181. ஷெர்ஷா சிந்துவை கைபற்றி யாருடைய பொறுப்பில் ஒப்படைத்தார்? இஸ்மாயில்கான்
182. ஷெர்ஷா கி.பி.1543-ல் மார்வாரை யாரிடம் இருந்து கைப்பற்றினார். மால்தேவர்
183. மார்வாரின் தலைநகர் எது? ஜோத்பூர்
184. ஷெர்ஷாவின் ஆணையை மீறி கலிஞ்சார் கோட்டையில் தஞ்சம் புகுந்த ரேவாவின் அரசர் யார்? பீர்பான் பகேலா
185. ஷெர்ஷா பந்தல்கண்டின் கலிஞ்சார் கோட்டையை ஏன் முற்றுகையிட்டார்?
இராஜாபீர்பான் பகேலாவிற்கு அடைக்கலம் கொடுத்ததால்.
186. ஷெர்ஷாவின் கலிஞ்சார் கோட்டை முற்றுகை எவ்வளவு காலம் நீடித்தது?
ஓராண்டு காலம்.
187. ஷெர்ஷா மேற்கொண்ட கடைசி படையெடுப்பு எது? கலிஞ்சார் படையெடுப்பு
188. பந்தல் கண்டின் (கலிஞ்சார்) மன்னர் பெயர் என்ன? கீர்த்தி சிங்
189. ஷெர்ஷா எவ்வாறு மரணம் அடைந்தார்? கலிஞ்சார் மீது போரிடும் போது வெடி மருந்து பயன்படுத்தியதால் காயமுற்றுஇ அதனால் மரணம் அடைந்தார்.
190. ஷெர்ஷா எந்த ஆண்டு மரணம் அடைந்தார்? கி.பி.1545 மே 22
191. ஷெர்ஷா மொத்தம் எத்தனை ஆண்டுகள் டெல்லியின் அரசராக இருந்தார்?
5 ஆண்டுகள்
192. ஷெர்ஷாவின் மகன்கள் பெயர் என்ன? ஜலால்ஷாஇ அடில் ஷா
193. ஷெர்ஷாவின் கல்லரை எங்கு உள்ளது? சசாரம் (பீகார்)
194. இதற்கு முன் வந்த எந்த அரசம் ஏன் பிரிட்டிஷ் அரசு உட்பட ஷெர்ஷா மன்னனை போல தீர்க்க தரிசனத்துடன் நடக்கவில்லை என்று கூறிய வரலாற்றாசிரியர் யார்?
கீன்
195. ஷெர்ஷா அக்பரைவிட சிறந்த சீர்திருத்தவாதியாகவும்,பேரரசை உருவாக்கியதில் அரும் பணியாற்றியவராகவும் விளங்கினார் என்று கூறிய வரலாற்றாசிரியர் யார்?
டாக்டா.மு.சு. கானுங்கோ
196. ஷெர்ஷாவின் ஆட்சி மேலும் சில காலம் நிலைத்திருந்தால் மாபெரும் முகலாய அரசர்கள் வரலாற்று மேடையில் தோன்றியிருக்கவே மாட்டார்கள் என்று கூறிய வரலாற்று ஆசிரியர் யார்? வின்சன்ட் ஸ்மித்
197. ஷெர்ஷாவிற்க்கு பின்பு ஆட்சிக்கு வந்த அவரின் மகன் பெயர் என்ன? ஜலால் ஷா
198. ஜாலால் ஷா———என்ற பட்டப் பெயருடன் அரியனை ஏறினார். இசுலாம் ஷா
199. இசுலாம் ஷாவின் ஆட்சி காலம் என்ன? கி.பி.1545-1553
200. இசுலாம் ஷாவிற்க்கு பின்பு ஆட்சிக்கு வந்தவர் யார்? முகமது அடில் ஷா
No comments:
Post a Comment