இந்திய வரலாறு
161. பஹார்கான் லோடி ஷெர்ஷாவிற்கு "ஷெர்கான்" என்ற பட்டத்தை ஏன் வழங்கினார்? தன்னந்தனியே ஒரு புலியை கொன்றதால்
162. ஷெர்ஷா எந்த ஆண்டு முகலாய படையில் சேர்ந்தார்? கி.பி.1527
163. பாபரிடம் ஷெர்ஷாவை அறிமுகம் செய்தவர் யார்? ஜினைத் பர்லாஸ்
164. ஷெர்ஷா பாபரின் படையில் இருந்து எந்த ஆண்டு விலகினார்? கி.பி. 1528
165. ஜினைத் பர்லாஸ் என்பவர் யார்? காரா மற்றும் மணிப்பூர் ஆளுனர்
166. முகலாய படையில் இருந்து விலகி பீகார் சென்ற ஷெர்ஷா யாரிடம் பணியாற்றினார்? பீகார் மன்னர் முகமது ஷாவிடம்
167. பீகார் மன்னர் முகமதுஷா கி.பி. 1528-ல் இறந்த பின்பு அவரது மனைவி——என்பவருக்கு ஷெர்ஷா ஆலோசரகராக பணியாற்றினார். தூது பீபி
168. சூனார் கோட்டையின் உரிமையாளர் தாஜ்கான் என்பவரின் விதவை மனைவி—என்பவரை மணந்து, ஷெர்ஷா சூனார் கோட்டையையும் ஏராளமான செல்வத்தையும் பெற்றார். லாட் மலிகா
169. சௌசா போர் வெற்றிக்கு பின்பு ஷெர்கான்-- என்ற பட்டத்தை சூட்டிக் கொண்டார். ஷெர்ஷா சூரி
170. ஷெர்ஷா பாபரின் படையில் எவ்வளவு காலம் பணிபுரிந்தார்? 15 மாதம்
171. ஷெர்ஷா யாருக்கு ஆசிரியராக பணியாற்றினார்? ஜலால்கான் (பீகார் மன்னரின் மகன்)
172. ஷெர்ஷா எந்த போர் வெற்றிக்கு பின்பு டெல்லியின் ஆட்சியாளரானார்? கன்னோசி போர் (பில்கிராம் போர்)
173. ஷெர்ஷா எந்த ஆண்டு டெல்லி அரியணையேறினார்? கி.பி.1540
174. கி.பி.1540-ல் ஷெர்கான் —— என்ற பட்டத்தோடு டெல்லியின் ஆட்சியாளரானார். ஷெர்ஷா
175. ஷெர்ஷா —— என்ற பட்டப் பெயரையும் சூடிக் கொண்டார். மகாராஜா விக்கிரமாதித்யா
176. ஷெர்கான் என்றால் என்று பொருள்? புலியை வெற்றி கொண்டவர்
177. கி.பி. 1542-ல் ஷெர்ஷா மாளவத்தை யாரிடம் இருந்து கைபற்றினார்? காதர் ஷா
178. கி.பி. 1543-ல் ரெய்சினை யாரிடம் இருந்து ஷெர்ஷா கைபற்றினார்? புரான் மால்
179. இராஜபுத்திரர்களின்இ உயிருக்கோஇ உடைமைக்கோ தீங்கு செய்வதில்லை என்று குரானின் மீது சத்தியம் செய்த ஷெர்ஷா எந்த கோட்டையை கைப்பற்ற அதை மீறினார்? ரெய்சின்
180. ஷெர்ஷா மூல்தானை யாரிடம் இருந்து கைப்பற்றினார்? பக்ஷீலங்கா
No comments:
Post a Comment