181. கள்ளைச் "சொல் விளம்பி" என்று கூறுவது?
குழூஉக்குறி
182. "கதவில்லை" – இத்தொடரில் அமைந்த புணர்ச்சி?
முற்றியலுகரப் புணர்ச்சி
183. இடையுகரம் இய்யாதலுக்கு எடுத்துக்காட்டு?
கரியன்
184. ஆதிநீடலுக்கு எடுத்துக்காட்டு?
பாசடை
185. அடியகரம் ஐயாதலுக்கு எடுத்துக்காட்டு?
பைந்தமிழ்
186. தன்னொற்றிரட்டலுக்கு எடுத்துக்காட்டு?
வெற்றிலை
187. இயற்சொல்லுக்கு எடுத்துக்காட்டு?
மரம்
188. திரிசொல்லுக்கு எடுத்துக்காட்டு?
மஞ்ஞை
189. திசைச்சொல்லுக்கு எடுத்துக்காட்டு?
பெற்றம்
190. வடசொல்லுக்கு எடுத்துக்காட்டு?
மதம்
191. "நல்குரவு" – எதிர்ச்சொல் தருக?
வலிமை
192. "கேளிர்" – எதிர்ச்சொல் தருக?
பகை
193. "மகிழ்ச்சி" எனும் பொருள் தரும் ஓரெழுத்து ஒரு மொழி எது?
ஓ
194. "தே" எனும் ஓரெழுத்து ஒரு மொழிக்குரிய சொல் எது?
அருள்
195. "வெகுளி" என்னும் தொழ்ற்பெயரின் வேர்ச்சொல் அறிக?
வெகுள்
196. முதனிலைத் திரிந்த தொழிற்பெயருக்கு எடுத்துக்காட்டு?
கேடு
197. "எல்" எனும் சொல்லின் பொருள்?
கதிரவன்
198. "எள்" எனும் சொல்லின் பொருள்?
எண்ணை வித்து
199. "சுளி" எனும் சொல்லின் பொருள்?
சினத்தல்
200. "சுழி" எனும் சொல்லின் பொருள்?
கடல்
No comments:
Post a Comment