இந்திய வரலாறு
1. குப்த பேரரசை தோற்றுவித்தவர் யார்?
ஸ்ரீகுப்தர்
2. குப்த மரபில் மிகச் சிறந்த அரசர் யார்?
சமுத்திர குப்தர்
3. குப்த மரபில் புகழ் பெற்ற கடைசி பேரரசர் யார்?
ஸ்கந்த குப்தர்
4. குப்த மரபில் கடைசி குறுநில அரசர் யார்?
இரண்டாம் ஜீவித குப்தர்
5. ஸ்ரீ குப்தருக்குப் பின்பு ஆட்சிக்கு வந்தவர் யார்?
கடோத்கஜர்
6. மகாராஜா என்ற பட்டத்தை சூட்டிக் கொண்ட குப்த அரசர்கள் யார்?
கடோத்கஜர்
7. குப்த மன்னர்களின் தலைநகர் எது?
பாடலிபுத்திரம்
8. குப்த மன்னர் கடோத்கஜருக்கு பின்பு ஆட்சிக்கு வந்தவர் யார்?
முதலாம் சந்திர குப்தர்
9. முதலாம் சந்திர குப்தர் ——— என்ற பட்டப் பெயரை சூட்டிக் கொண்டார்.
மகாராஜாதி இராஜா
10. "மகாராஜாதி இராஜா" என்ற பட்டப் பெயரின் பொருள் என்ன?
அரசர்களுக்கு அரசன்
11. முதலாம் சந்திரகுப்தர் ———— ஆண்டு முதல் —— ஆண்டு வரை ஆட்சி செய்தார்.
கி.பி.319 முதல் கி.பி.330 வரை
12. முதலாம் சந்திர குப்தரின் மனைவியின் பெயர் என்ன?
குமார தேவி
13. குமார தேவி எந்த நாட்டைச் சேர்ந்த இளவரசி?
லிச்சாவி இளவரசி
14. நாணயத்தில் உருவம் பொறிக்கப்பட்ட முதல் இந்திய அரசி ———
லிச்சாவி இளவரசி குமார தேவி
15. முதல் சந்திர குப்தர்——,—— மற்றும் —— நாடுகளை தன் பேரரசுடன் இணைத்துக் கொண்டார்.
மகதம்இ அலகாபாத் மற்றும் அயோத்தி
16. குப்த சகாப்தத்தை தொடங்கி வைத்தவர் யார்?
முதலாம் சந்திர குப்தர்
17. குப்த சகாப்தம் தொடங்கிய ஆண்டு எது?
கி.பி.319-320
18. முதலாம் சந்திர குப்தருக்கு பின்பு ஆட்சிக்கு வந்தவர் யார்?
சமுத்திர குப்தர்
19. சமுத்திர குப்தர் ——— ஆண்டு முதல் ——— வரை ஆட்சி செய்தார்?
கி.பி.330 முதல் கி.பி.380 வரை
20. சமுத்திர குப்தரின் ஆட்சி முறையையும்,வெற்றியையும் பற்றிக் கூறும் கல்வெட்டு எது?
அலகாபாத் தூண் கல்வெட்டு
No comments:
Post a Comment