SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Thursday, July 14, 2016

23.இந்திய வரலாறு

இந்திய வரலாறு
52. உலகில் பல பகுதிகளில் சமயப் புரட்சி ஏற்பட்ட நூற்றாண்டு எது?
கி.மு.6 ஆம் நூற்றாண்டு
53. கி.மு.6 ஆம் நூற்றாண்டில் கங்கைச் சமவெளியில் தோன்றிய சமயப் பிரிவுகளின் எண்ணிக்கை ———
62 சமயப் பிரிவுகள்
54. சமண சமயத்தின் முதல் தீர்த்தங்கர் யார்?
ரி~ தேவர்
55. சமண சமயத்தின் 23 வது தீர்த்தங்கர் யார்?
பார்சவ நாதர்
56. சமண சமயத்தின் 24 வது தீர்த்தங்கர் யார்?
மகாவீரர்
57. மகாவீரர் எந்த ஆண்டு பிறந்தார்?
கி.மு.539
58. மகாவீரர் எந்த ஆண்டு இறந்தார்?
கி.மு.467
59. மகாவீரரின் தந்தையின் பெயர் என்ன? அவர் எந்த  குலத்தைச் சார்ந்தவர்?
சித்தார்த்தர் - சத்திரிய குலம்
60. மகாவீரரின் தாயார் பெயர் என்ன?
திரிசலா
61. மகாவீரரின் மனைவியின் பெயர் என்ன?
யசோதா
62. மகாவீரரின் மகளின் பெயர் என்ன?
பிரியதர்சனா என்ற அனோஜா
63. மகாவீரர் பிறந்த இடம் எது?
வைசாலிக்கு அருகில் குந்தக் கிராமம்
64. மகாவீரர் ஞானம் பெற்ற இடம் எது?
ஜிம்பிரிக் கிராமம்
65. மகாவீரர் துறவு வாழ்க்கை மேற்கொண்ட போது அவரின் வயது என்ன?
30
66. மகாவீரர் எத்தனை ஆண்டுகள் துறவு வாழ்க்கை     மேற்கொண்டார்?
12 ஆண்டுகள்
67. மகாவீரர் ஞானம் பெற்ற போது அவரின் வயது என்ன?
42 வயது
68. மகாவீரர் மொத்தம் எத்தனை ஆண்டுகள் தனது     சமயகருத்துகளைப்பரப்பினார்?
30 ஆண்டுகள்
69. மகாவீரர் ஞானம் பெற்ற ஆற்றங்கரை எது?
ரிஜிபாலிக்கா ஆற்றங்கரை
70. மகாவீரர் எந்த மரத்தடியில் ஞானம் பெற்றார்?
சால் மரத்தடியில்



No comments:

Post a Comment