TNPSC பொதுத்தமிழ்
41.ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை அறிதல்
அ)ட்ரெயினிங் ரொம்ப பயனா இருந்தது
ஆ)பயிற்சி ரொம்ப பயனுடையதாக இருந்தது
இ)பயிற்சி நிரம்பப் பயனுடையதாக இருந்தது
ஈ)பயிற்சி ரொம்ப யூஸ்புல்லா இருந்தது
விடை : இ)பயிற்சி நிரம்பப் பயனுடையதாக இருந்தது
42.ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை அறிதல்
அ)அண்ணன் முதல் வகுப்பில் பாஸ் பண்ணிட்டான்
ஆ)அண்ணன் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று விட்டன்
இ)அண்ணன் பஸ்ட் கிளாசில தேர்ச்சி பண்ணிட்டான்
ஈ)அண்ணான் முதல் வகுப்பில் தேர்ச்சி பண்ணிட்டான்
விடை : ஆ)அண்ணன் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று விட்டன்
43.ஆங்கிலச் சொற்களை நீக்குக
அ)அப்ளிகேசன் வாங்க லாஸ்டு டேட்டு இன்று
ஆ)அப்ளிகேசன் வாங்க லாஸ்டு நாள் இன்று
இ)அப்ளிகேசன் வாங்கக் கடைசி டேட்டு இன்று
ஈ)விண்ணப்பம் வாங்கக் கடைசி நாள் இன்று
விடை : ஈ)விண்ணப்பம் வாங்கக் கடைசி நாள் இன்று
44.சரியான தமிழ்ச் சொற்றொடரைத் தேர்ந்தெடு
அ)டுடே ரிப்பப்ளிக் டே
ஆ)இன்று ரிப்ப்ளிக் டே
இ)இன்று குடியரசு நாள்
ஈ)இன்று சுதந்திர தினம்
விடை : இ)இன்று குடியரசு நாள்
45.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளையறிதல்
அலகு அளகு அழகு
அ)அளவு உறுப்பு வனப்பு
ஆ)அளவை மூக்கு சிறப்பு
இ)பறவை மூக்கு பெண் பறவை சிறப்பு
ஈ)பறவை மூக்கு பெண் பறவை வனப்பு
விடை : ஈ)பறவை மூக்கு பெண் பறவை வனப்பு
46.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க
ஒலி ஒளி ஒழி
அ)வெளிச்சம் ஒழித்தல் ஒசை
ஆ)ஒசை வெளிச்சம் ஒழித்தல்
இ)ஒழித்தல ஒசை வெளிச்சம்
ஈ)வெளிச்சம் ஒசை ஒழித்தல்
விடை : ஆ)ஒசை வெளிச்சம் ஒழித்தல்
47.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தோந்தெடுக்க
ஊண் ஊன் ஊழ்
அ)உணவு இறைச்சி ஊழ்வினை
ஆ)இறைச்சி உணவு ஊழ்வினை
இ)ஊழ்வினை உணவு இறைச்சி
ஈ)உணவு ஊழ்வினை இறைச்சி
விடை : அ)உணவு இறைச்சி ஊழ்வினை
48.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க
கரை கறை கழை
அ)ஒரம் கரும்பு அழுக்கு
ஆ)ஒரம் அழுக்கு கரும்பு
இ)கரும்பு ஒரம் அழுக்கு
ஈ)அழுக்கு கரும்பு ஒரம்
விடை : ஆ)ஒரம் அழுக்கு கரும்பு
49.ஒரெழுத்து ஒரு மொழி - உரிய பொருளைக் கண்டறிக 'ஆ"
அ)காளை
ஆ)பசு
இ)எருமை
ஈ)குதிரை
விடை : ஆ)பசு
50.ஒரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருளைக் கண்டறிதல் 'ஏ"
அ)அழகு
ஆ)அம்பு
இ)நாண்
ஈ)வில்
விடை : ஆ)அம்பு
No comments:
Post a Comment