SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Thursday, July 28, 2016

1.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
21.உண் என்ற வேர்ச்சொலில் வினைமுற்று காண்க
அ)உண்கின்ற
ஆ)உண்ணும்
இ)உண்டான்
ஈ)உண்ணாநின்ற
விடை : இ)உண்டான்
22.தா என்ற சொல்லின் வினையெச்சம் யாது?
அ)தருக
ஆ)தந்து
இ)தந்தவன்
ஈ)தருவான்
விடை : ஆ)தந்து
23.செல் என்ற சொல்லின் வினையாலணையும் பெயர் எது?
அ)சென்று
ஆ)செல்லும்
இ)செல்லுவாய்
ஈ)சென்றவர்
விடை : ஈ)சென்றவர்
24.நட என்ற சொல்லின் தொழிற்பெயர்
அ)நடத்து
ஆ)நடப்பான்
இ)நடத்தல்
ஈ)நடக்கிறார்
விடை : இ)நடத்தல்
25.வேர்ச்சொல்லைக் கொடுத்து வினைமுற்றாக்குக -படி
அ)படித்தல்
ஆ)படித்தான்
இ)படித்தானை
ஈ)படித்து
விடை : ஆ)படித்தான்
26.வேர்ச்சொல்லைப் பலர்பால் வினைமுற்று ஆக்குக - உரை
அ)உரைத்தல்
ஆ)உரைதல்
இ)உரைத்தனர்
ஈ)படித்து
விடை : இ)உரைத்தனர்
27.வேர்ச்சொல்லை வியங்கோள் வினைமுற்றாக்குக - சொல்
அ)சொல்லுதல்
ஆ)சொல்லுக
இ)சொன்னவன்
ஈ)சொன்னவர்
விடை : ஆ)சொல்லுக
28.அறி என்ற வேர்ச்சொல்லை வினையெச்சம் ஆக்குக
அ)அறிந்தான்
ஆ)அறிதல்
இ)அறிந்தவன்
ஈ)அறிந்து
விடை : ஈ)அறிந்து
29.அகரவரிசைப்படி சொற்களைச் சீர் செய்க
அ)ஆடு,ஓடு,ஏடு,ஐயம்
ஆ)ஓடு,ஜயம்,ஏடு,ஆடு
இ)ஆடு,ஏடு,ஐயம்,ஓடு
ஈ)ஐயம்,ஓடு,ஏடு,ஆடு
விடை : இ)ஆடு,ஏடு,ஐயம்,ஓடு
30.அகரவரிசைப்படி சொற்களை அமைத்திடுக
அ)தகவல்,தீர்ப்பு,தோட்டம்,தேக்கம்
ஆ)தோட்டம்,தீர்;ப்பு,தேக்கம்,தகவல்
இ)தீர்;ப்பு,தகவல்,தேக்கம்,தோட்டம்
ஈ)தகவல்,தீர்;ப்பு,தேக்கம்,தோட்டம்
விடை : ஈ)தகவல், தீர்;ப்பு,தேக்கம், தோட்டம்



No comments:

Post a Comment