SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Monday, July 25, 2016

1.இந்திய வரலாறு

இந்திய வரலாறு
41. இராசசேகரர் என்ற அறிஞர் எழுதிய நூல் எது?
அ) பால இராமாயணம்                  
ஆ) சாகுந்தலம்
இ) கீத கோவிந்தம்                         
ஈ) இராமாயணம்
விடை: அ) பால இராமாயணம்                  
42. மகோபாவிற்கு அருகில் உள்ள ஏரியை அமைத்தவர் யார்?
அ) யசோதவர்மன்       
ஆ) கீர்த்திவர்மன்
இ) விஷ்ணுவர்மன்      
ஈ) இராசவர்மன்
விடை: ஆ) கீர்த்திவர்மன்
43. சந்தேல மரபின் கடைசி  அரசனைத் தோற்கடித்தவர் யார்?
அ) கஜினி மாமூத்                  
ஆ) கோரி முகமது
இ) குத்புதீன் ஐபக்
ஈ) அல்புடிஜின்
விடை:இ) குத்புதீன் ஐபக்
44. முதலாம் போஜர் சமஸ்கிருஸ்துவ கல்லூரியை அமைத்த இடம் எது?
அ) கன்னோசி                       
ஆ) தாரா
இ) மாளவம்
ஈ) ஜெய்பூர்
விடை: ஆ) தாரா
45. சமணக் கோவில் தில்வாரா அமைந்துள்ள இடம் எது?
அ) ஆக்ரா                     
ஆ) டெல்லி
இ) அபுமலை
ஈ) கஜுராஹோ
விடை:இ) அபுமலை
46. இராசேந்திர சோழர் தோற்கடித்த பாலர் மரபு அரசர் யார்?
அ) மகிபாலன்                       
ஆ) கோபாலன்
இ) தர்மபாலன்
ஈ) தேவபாலன்
விடை: அ) மகிபாலன்                       
47. கி.பி. 1025-இல் மாரித் கஜினியால் கொள்ளையடிக்கப்பட்ட  புகழ்பெற்ற இந்து ஆலயம் எது?
அ) கஜுராஹோ          
ஆ) சோமநாதபுரம்
இ) தில்வாரா                
ஈ) பூரி ஜெகன் நாதர் கோவில்
விடை: ஆ) சோமநாதபுரம்
48. கி.பி. 1197-இல் நாளந்தா பல்கலைக்கழகத்தை அழித்தவர் யார்?
அ) கோரி முகம்மது               
ஆ) குதுபுதீன் ஐபெக்
இ) பக்கியார் கில்ஜி
ஈ) அல்புடிஜின்
விடை: இ) பக்கியார் கில்ஜி
49. பிரதிகாரர் மரபினைத் தோற்றுவித்தவர் யார்?
அ) தாங்கர்
ஆ) கீர்த்திவர்மன்
இ) முதலாம் நாகபட்டர்        
ஈ) யசோதவர்மன்
விடை:  இ) முதலாம் நாகபட்டர்        
50. பரமாரர்கள் மரபினை தோற்றுவித்தவர் யார்?
அ) உபேந்திரர்                       
ஆ) கோபாலன்
இ) மகேந்திரவர்மன்              
ஈ) முதலாம் நாகபட்டர்
விடை:  அ) உபேந்திரர்                       
51. வங்காளத்தை ஆண்ட பாலர் மரபின் முதல் அரசர் யார்?
அ) மகேந்திர பாலன்             
ஆ) கோபாலன்
இ) தாங்கர்                             
ஈ) மகிபாலம்
விடை: ஆ) கோபாலன்
52. இராஜபுத்திரர்களின் ஆட்சி அமைப்பு எதன் அடிப்படையாகக் கொண்டது.
அ) படை             
ஆ) நாடு
இ) நிலம்                      
ஈ) மக்கள் தொகை
விடை: இ) நிலம்                      
53. சௌகன்களின் தலைநகர் எது?
அ) ஆஜ்மீர்                            
ஆ) கன்னோசி
இ) டெல்லி
ஈ) லக்னோ
விடை:  அ) ஆஜ்மீர்                            
54. இராஜபுத்திர அரசு குடும்பத்தில் தீக்குளித்து உயிர்விடும்  பழக்கமானது
அ) ஜமல்                      
ஆ) சாந்தல்
இ) ஜவ்ஹர்                           
ஈ) ஸ்தம்பம்
விடை:  இ) ஜவ்ஹர்                            



No comments:

Post a Comment