SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Sunday, July 17, 2016

1.எதுகை,மோனை,இயைபு,இவற்றுள் ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுத்தல்

எதுகை,மோனை,இயைபு,இவற்றுள் ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுத்தல்
1.அன்புற்று அமர்ந்த வழக்கு என்ப வையகத்து இன்புற்றார் எய்தும் சிறப்பு - இப்பாடலடிகளில் கண்டுள்ளவாறு பின்வருவனவற்றுள் சரியான விடையைச் சுட்டுக
அ)இணை மோனை வந்துள்ளது
ஆ)பொழிப்பு மோனை வந்துள்ளது
இ)ஒரூஉ மோனை வந்துள்ளது
ஈ)கூழைமோனை வந்துள்ளது
விடை : அ)இணை மோனை வந்துள்ளது

2.அன்புபிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் ஆர்வலர் பன்கணீர் பூசல் தரும் - இப்பாடலடிகளிள் சரியான விடையைச் சுட்டுக
அ)முற்றுமோனை
ஆ)கீழ்க்கதுவாய் மோனை
இ)மேற்கதுவாய் மோனை
ஈ)பொழிப்பு மோனை
விடை : ஈ)பொழிப்பு மோனை

3.கற்க கசடற கற்பவை கற்றபின் நிற்க அதற்கு தக - இப்பாடலடிகளில் நிற்க அதற்கு தக - இப்பாடலடிகளில் கண்டுள்ளவாறு பின்வருவனவற்றுள் சரியான விடையைச் சுட்டுக
அ)கூழை மோனை
ஆ)முற்றுமோனை
இ)கீழ்க்கதுவாய் மோனை
ஈ)மேற்கதுவாய் மோனை
விடை : ஆ)முற்றுமோனை

4.ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு எழுமையும் ஏமாப்பு உடைத்து இப்பாடலடிகளில் கண்டுள்ளவாறு பின்வருவனவற்றுள் சரியான விடையைச் சுட்டுக
அ)இணை மோனை
ஆ)கூழை மோனை
இ)பொழிப்பு மோனை
ஈ)ஒரூஉ மோனை
விடை : ஈ)ஒரூஉ மோனை

5.உள்ளத்தால் பொய்ய தொழுகின் உலகத்தார் உள்ளத்துள் எல்லாம் உளன் - இக்குறளின்படி உதுகைத்தொடை வருவது
அ)உள்ளத்தால் - உலகத்தார்
ஆ)உள்ளத்தால் - உள்ளத்துள்
இ)தொழுகின் - உளன்
ஈ)பொய்யா எல்லாம்
விடை : ஆ)உள்ளத்தால் – உள்ளத்துள்

6.கேட்பினும் கேளாத் தகையவே கேள்வியால் தோட்கப் படாத செவி- இப்பாடல்களில் கண்டுள்ளவாறு சரியான விடையை சுட்டுக
அ)சீழ்க்கதுவாய் மோனை
ஆ)மேற்கதுவாய் மோனை
இ)கூழைமோனை
ஈ)முற்று மோனை
விடை : அ)சீழ்க்கதுவாய் மோனை

7.துறந்தாரின் தூய்மை உடையர் இறந்தார்வாய்
இன்னார்ச்சொல் நோற்கிற் பவர் இப்பாடலடிகளில் கண்டுள்ளவாறு சரியான விடையைச் சுட்டுக
அ)இணை எதுகை வந்துள்ளது
ஆ)பொழிப்பு எதுகை வந்துள்ளது
இ)ஒரூஉ எதுகை வந்துள்ளது
ஈ)கூழை எதுகை வந்தள்ளது
விடை : இ)ஒரூஉ எதுகை வந்துள்ளது

8.சான்றவர் சான்றாண்மை குன்றின் இருநிலத்தான் தாங்காது மன்னோ பொரை - இப்பாடலடிகளில் கண்டுள்ளவாறு சரியான விடையை கட்டுக
அ)முற்றொதுகை வந்துள்ளது
ஆ)கீழ்க்கதுவாய் எதுகை வந்துள்ளது
இ)மேற்கத்துவாய் எதுகை வந்துள்ளது
ஈ)கூழை எதுகை வந்துள்ளது
விடை : ஈ)கூழை எதுகை வந்துள்ளது

9.அன்பிலார் எல்லாம தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு - இக்குறளின்படி வந்துள்ள மோனை,எதுகை காண்க
அ)இணை மோனை,இணை எதுகை
ஆ)ஒரூஉ மோனை,ஒரூஉ எதுகை
இ)கூழை மோனை,கூழை எதுகை
ஈ)கீழ்க்கதுவாய் மோனை ,கீழ்க்கதுவாய் எதுகை
விடை : ஆ)ஒரூஉ மோனை,ஒரூஉ எதுகை

10.கண்ட பேரண்டத் தண்டலை நாடும் கனக் முன்றில் அனம்பிளை யாடும் இவற்றில் அடிஇயைபுத் தொடை உது?
அ)கண்ட - கனளன
ஆ)பேரண்டத் - முன்றில்
இ)தண்டலை நாடும்
ஈ)நாடும் - யாடும்
விடை : ஈ)நாடும் – யாடும்



No comments:

Post a Comment