SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Friday, July 1, 2016

19.vao exam general knowledge questions & answers

261. # சென்னை எழும்பூர் அருங்காட்சியகம் தொடங்கப்பட்ட ஆண்டு ? விடை – 1851
262. யானைப்போர் காண்பதற்காக மதுரையில் அமைந்திருந்த மைதானம் ? விடை – தமுக்கம் மைதானம்
263. பிள்ளைத்தமிழிலுள்ள பாடல்களின் எண்ணிக்கை ? விடை – 100
264. 'அஞ்சலை அரக்க ! பார் விட்டந்தர மடைந்தா' எனும் பாடல் இடம்பெறும் நூல் ? விடை – கம்பராமாயணம்
265. ஏறுதழுவுதல் எந்நிலத்தில் நடைபெறும் வீரவிளையாட்டு ? விடை – முல்லைநிலம்
266. மக்கள் கவிஞர் என்று அழைக்கப்படுபவர் ? விடை – பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம்
267. தாராசுரம் கோவிலின் கூம்பிய விமானத்தோற்றமும் அதற்கு கீழே இருபுறமும் யானைகளும் , குதிரைகளும் பூட்டிய ரதம்போல் அமைந்த மண்டபமும் வான்வெளி  கசியத்தைக்காட்டுவதாக கூறிய வெளிநாட்டு வானியல் அறிஞர் ? விடை – கார்ல் சேகன்
268. தஞ்சாவூரில் ஜ.யு .போப் எத்தனை ஆண்டுகள் பணிபுரிந்தார் ? விடை – 8 ஆண்டுகள்
269. 'சுப்புரத்தினம் ஒர் கவி ' என்று பாரதிதாசனை அறிமுகிப்படுத்தியவர் ?விடை – பாரதியார்
270. ♦'மனிதனுடைய மனத்தில் உணர்ச்சிகளை எழுப்பி அழகையும் இன்பத்தையும் அளிக்கின்ற பண்பு அழகுக்கலைகளுக்கே உண்டு ' என்று கூறியவர் ? விடை – மயிலை . சீனி . வேங்கடசாமி
271. ♦ கம்பனின் மிடுக்கையும் பாரதியின் சினப்போக்கையும் தன் கவிதைகளில் பயன்படுத்தியவர் ? விடை – க. சச்சிதானந்தன்
272. ♦ துன்பத்தையும் நகைச்சுவையோடு சொல்வதில் வல்லவர் யார்? விடை – ராமச்சந்திரகவிராயர்
273. ♦ குறிஞ்சித்திட்டு எனும் நூலின் ஆசிரியர் ? விடை – பாரதிதாசன்
274. ♦ அபிதான சிந்தாமணியைத் தொகுத்தவர் ? விடை – சிங்காரவேலனார்
275. ♦ அகரமுதலிகள் தோன்ற அடிப்படையாக அமைந்த நிகண்டு ? விடை – அகராதி நிகண்டு
276. ♦ இலக்கிய வகையில் சொற்கள் எத்தனை வகைப்படும் ? அவை யவை ? விடை – 4 (இயற்சொல் , திரிசொல் , திசைச்சொல் , வடசொல்)
277. ♦சிறந்த ஊர்களைக் குறிக்கும் சொல் ? விடை – புரம்
278. ♦ ' தெரியல் இவன்கண்டாய் செங்கழுநீர் மொட்டை ' எனத்துவங்கும் பாடல் இடம்பெறும் நூல் எது ? விடை – நளதமயந்தி
279. ♦ கணினியின் முதல் செயல் திட்ட வரைவாளர் ? விடை – லேடி லவ்லேஸ்
280. ♦ சார்பெழுத்துகள் எத்தனை வகைப்படும் ? விடை – 10




No comments:

Post a Comment