SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Thursday, July 28, 2016

19.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
81.பெயர்ச் சொல்லின் வகையறிக - 'கழல் தொழுதான்"
அ)இடவாகு பெயர்
ஆ)காரியாகு பெயர்
இ)தானியாகு பெயர்
ஈ)முதலாகு பெயர்
விடை : இ)தானியாகு பெயர்
82.இலக்கணக் குறிப்பு தருக - 'தமிழ்த்தாய்"
அ)வினைமுற்று
ஆ)உவமைத் தொகை
இ)உருவகம்
ஈ)உம்மைத் தொகை
விடை : இ)உருவகம்
83.இலக்கணக் குறிப்பு - 'இன்சொல்"
அ)உருவகம்
ஆ)உம்மைத்தொகை
இ)உவமைத்தொகை
ஈ)பண்புத்தொகை
விடை : ஈ)பண்புத்தொகை
84.இலக்கணக் குறிப்பு தருக - 'ஊறுகாய்"
அ)வினைமுற்று
ஆ)வினைத்தொகை
இ)உரிச்சொல்
ஈ)இடைச்சொல்
விடை : ஆ)வினைத்தொகை
85.இலக்கணக் குறிப்பெழுதுக - 'எம்பி"
அ)உருபு மயக்கம்
ஆ)வலித்தல் விகாரம்
இ)மருஉ
ஈ)உருவகம்
விடை : இ)மருஉ
86.இலக்கணக் குறிப்பெழுதுக - 'எண்ணிலா"
அ)ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
ஆ)தொகுத்தல் விகாரம்
இ)கடைப்போலி
ஈ)நீட்டல் விகாரம்
விடை : அ)ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
87.இலக்கணக் குறிப்பொழுதக - 'பொரிகடலை"
அ)பண்புத்தொகை
ஆ)வினைத்தொகை
இ)உம்மைத்தொகை
ஈ)இலக்கணப்போலி
விடை : இ)உம்மைத்தொகை
88.இலக்கணக் குறிப்பெழுதுக - மதிமுகம்
அ)வினைத்தொகை
ஆ)பண்புத்தொகை
இ)உவமைத்தொகை
ஈ)உம்மைத்தொகை
விடை : இ)உவமைத்தொகை
89.இலக்கணக் குறிப்பொழுதுக - 'இராப்பகல்"
அ)பண்புத்தொகை
ஆ)உம்மைத்தொகை
இ)வினைத்தொகை
ஈ)அன்மொழித்தொகை
விடை : ஆ)உம்மைத்தொகை
90.இலக்கணக்  குறிப்பொழுதுக - 'முகில்வண்ணன்"
அ)உம்மைத் தொகை
ஆ)உவமைத்தொகை
இ)பண்புத் தொகை
ஈ)வினைத்தொகை
விடை : ஆ)உவமைத்தொகை



No comments:

Post a Comment