SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Wednesday, July 20, 2016

18.செல்களும் திசுக்களும்

செல்களும் திசுக்களும்
1.இவற்றில் யூகேரியோட்டிக் கெல்கள் பற்றிய தவறான கூற்று எது?
அ)இது 5-100 மைக்ரோமீட்டர் அளவை கொண்ட பெரிய செல்கள் ஆகும்
ஆ)ஒரு குரொமோசோமை மட்டுமே பெற்றுள்ளது
இ)இதன் உட்கருப் பாருள் உட்கருச் சவ்வினால் சூழப்பட்டிருக்கிறது
ஈ)இது தெளிவான உட்கருவைப் பெற்றுள்ளது
விடை : ஆ)ஒரு குரொமோசோமை மட்டுமே பெற்றுள்ளது

2.இவற்றில் புரொகேரியோடிக் செல்கள் பற்றிய சரியான கூற்று எது?
அ)ரைபோசசோம்ள் சிறியவை
ஆ)நியூக்ளியோஸ் காணப்படுகிறது
இ)சவ்வினால் சூழப்பட்ட செல் நுண் உறுப்புகளைப் பெற்றிருக்கும்
ஈ)மைட்டாசிஸ் மற்றும் மியாஸிஸ் மற்றும் மியாஸிஸ் வகையான செல் பகுப்புகள் நடைபெறுகின்றன
விடை : அ)ரைபோசசோம்ள் சிறியவை

3.இவற்றில் பொருத்தமற்ற இணை எது?
அ)உறுப்புகள் - திசுக்களாலானவை
ஆ)திசுக்கள் - செல்களாலானவை
இ)செல்கள் - ரைபோசோம்களாலானவை
ஈ)மூலக்கூறுகள் - செல்களுக்கு அடிப்படை
விடை : இ)செல்கள் - ரைபோசோம்களாலானவை

4.உயிரினத்தின் அடிப்படை அலகு எது?
அ)திசு
ஆ)உறுப்பு
இ)செல்
ஈ)மூலக்கூறு
விடை : இ)செல்

5.இவற்றில் பொருத்தமான இணை எது?
அ)ஹூக் - புரொட்டோபிளாசம்  என ப்பெயரிட்டவர்
ஆ)புர்கின்ஜி செல் என பெயரிட்டவர்
இ)ராபர்ட்ப்ரௌன் - உட்கருவை கண்டறிந்தவர்
ஈ)ஆன்டன் வான் லூவன் ஹாக் -குரோமோசோமை கண்டறிந்தவர்
விடை : இ)ராபர்ட்ப்ரௌன் - உட்கருவை கண்டறிந்தவர்

6.செல்கள் இந்த வடிவில் காணப்படுகிறத
அ)கோளவடிவம்
ஆ)கதிர் வடிவம்
இ)பலகோண வடிவம்
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்

7.புரொட்டோபிளாசம்
அ)செல்லில் உள்ள உயிர்பொருள்
ஆ)நன்கு அமைந்த கூழ்மம் போன்ற ஒளி ஊடுருவக்கூடிய அரை திரவம்
இ)வேதிப்பொருட்களின் மூலக்கூறுகளால் ஆனவை
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்

8.இவற்றில் தாவர செல் பற்றிய தவறான கூற்று எது?
அ)விலங்கு செல்லைக் காட்டிலும் தாவர செல் பெரியது
ஆ)தாவர செல் செல்லின் பெரும்பகுதியை அக்கிரமித்துக் கொண்டுள்ள பெரிய வாக்குவொல்களைப் பெற்றுள்ளது
இ)கிளைக்கோஜன் சேமிப்பு பொருளாகும்
ஈ)தாவர செல்கள் கணிகங்களைப்  பெற்றுள்ளன
விடை : இ)கிளைக்கோஜன் சேமிப்பு பொருளாகும்

9.இவற்றில் விலங்கு செல் பற்றிய தவறான கூற்று எது?
அ)விலங்கு செல செல்சுவரைப் பெற்றிருப்பதில்லை
ஆ)விலங்கு செல்கள் கணிகங்களைப் பெற்றுள்ளன
இ)அனைத்து விலங்கு செல்களிலும் லைசோம்கள் காணப்படுகின்றன
ஈ)அனைத்து விலங்கு செல்களும் சென்ட்ரோசோம்களைப் பெற்றுள்ளன
விடை : ஆ)விலங்கு செல்கள் கணிகங்களைப் பெற்றுள்ளன

10.உயிரின் இயற்பியல் தளம்
அ)கிளைக்கோஜன்
ஆ)புரொட்டோபிளாசம்
இ)லைசோசோம்கள்
ஈ)சென்ட்ரோசோம்
விடை : ஆ)புரொட்டோபிளாசம் 



No comments:

Post a Comment