321. வேட்டையாடும் விலங்குகளுக்குப் பார்வைச் சக்தி குறைவு. ஆனால் மோப்ப உணர்வு மொட்டுகள் சராசரியாக 22 கோடி என்ற அளவில் உள்ளன.
322. மனிதர்களுக்கு வாசனையை உணரும் மொட்டுகள் 50 லட்சம் உள்ளன. பத்தாயிரம் வெவ்வேறு விதமான வாசனைகளை நம்மால் பிரித்து அறிய முடியும்.
323. உயிர் வாழ்வதற்கு எல்லா உணர்வுகளும் வேண்டும் என்பதில்லை. செடிகள் வெளியிடும் கரியமில வாயுவை உண்டு வாழும் ஒரு புழு உள்ளது. அதற்கு அந்த ஒரு வாசனை மட்டுமே தெரியும்.
324. ஒவ்வோர் உயிரினமும் தம் உடலிலிருந்து தனித்தனி வாசனையைக் காற்றில் கலக்கிறது. வண்ணத்துப்பூச்சி தனது வாசனையால் பல மைல்களுக்கு அப்பால் உள்ள தனது இணையைக் கவரும்.
325. சூரியனின் புறஊதாக் கதிர்களை தேனீக்கள் உணர்கின்றன. சூரியன் இருக்குமிடத்தை வைத்து, தம் கூட்டுக்குத் திரும்பும் திசையை அவை தெரிந்துகொள்கின்றன.
326. தவளைக்குப் பார்வைத் திறன் குறைவு. தனது இரை மட்டுமே அதற்குப் புலப்படும்.
327. * உலகின் மீது ஒரு மணி நேரம் விழும் சூரியசக்தி, 2 லட்சத்து 10 ஆயிரம் டன் நிலக்கரி தரும் சக்திக்கு சமம்.
328. * கணினி அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு, 1952.
329. * மனித உடலில் அதிகளவில் உள்ள உப்பு, கால்சியம்.
330. * கடல்நீரில் உள்ள உப்பின் அளவு, 35 சதவீதம்.
331. * நாகாலாந்து தனி மாநிலமாக அறிவிக்கப்பட்ட ஆண்டு, 1962.
332. * ஒரு நாளில் நாம் ஏறக்குறைய 15 ஆயிரம் முறை கண்களை இமைக்கிறோம்.
333. * தேனீக்களுக்கு 5 கண்கள் உள்ளன.
334. * மனிதனின் நாக்கில் 8 ஆயிரம் சுவை மொட்டுகள் உள்ளன.
335. * செஸ் போர்டில் உள்ள வெள்ளைக் கட்டங்களின் எண்ணிக்கை, 32.
336. * ஒரு பென்சிலைக் கொண்டு சுமார் 50 கிலோமீட்டர் நீளத்திற்கு கோடு வரைய முடியும்.
337. * மின்சார பல்பில் `இனர்ட்' என்ற வாயு பயன்படுத்தப்படுகிறது.* மனித உடலில் 640 தசைகள், 206 எலும்புகள் உள்ளன.
338. * மேற்குத் தொடர்ச்சி மலையும், கிழக்குத் தொடர்ச்சி மலையும் இணையுமிடம், நீலகிரி.
339. * இலைகளை உதிர்க்காத மர வகை, ஊசியிலை மரங்கள்.
340. * இளம்வயதில் ஓவியராக இருந்தவர், ஹிட்லர்.
No comments:
Post a Comment