இந்திய வரலாறு
81. சாதவாகன வம்சத்தில் மொத்தம் எத்தனை அரசர்கள் ஆட்சி செய்தனர்?
30 அரசர்கள் ஆட்சி செய்தனர்
82. சாதவாகன வம்சத்தில் சிறந்த அரசர் யார்?
கௌதம புத்ர சதர்கனி
83. சிமுகருக்குப் பின்பு ஆட்சிக்கு வந்தவர் யார்?
கிருஷ்ணர்
84. கிருஷ்ணருக்குப் பின்பு ஆட்சிக்கு வந்தவர் யார்?
ஸ்ரீசதர்கனி
85. ஸ்ரீசதர்கனி————என்ற நாட்டை வென்று அசுவமேத யாகம் நடத்தினார்.
மாளவம்
86. முதலாம் சதர்கனியின் மகன்கள் பெயர் என்ன?
வேதஸ்ரீஇ சதிஸ்ரீ
87. முதலாம் சதர்கனி போர்களத்தில் இறந்ததால் அவருக்கு பின்பு அரியணையில் அமர்த்தப் பட்டவர் யார்?
சதிஸ்ரீ
88. சதிஸ்ரீக்கு காப்பாளராக இருந்து ஆட்சி செய்தவர் யார்?
அன்னை நாயனிகா
89. அன்னை நாயனிகா என்பவர் யார்?
முதலாம் ஸ்ரீசதர்கனியின் மனைவி
90. சதிஸ்ரீ————என்ற பட்டப் பெயருடன் ஆட்சிக்கு வந்தார்.
இரண்டாம் சதர்கனி
91. இரண்டாம் சதர்கனி சாதவாகன வம்சத்தின் எத்தனையாவது அரசர்?
4 வது அரசர்
92. சாதவாகன வம்சத்தில் 17 வது அரசர் யார்?
ஹாலா
93. ஹாலா ஒரு சிறந்த————ஆவார்.
கவிஞர்
94. ஹாலா இயற்றிய நூலின் பெயர் என்ன?
கத சப்த சாய்
95. கத சப்த சாய் என்ற நூல் எந்த மொழியில் எழுதப்பட்டது?
பிராகிருத மொழியில்
96. கத சப்த சாய் என்ற நூல் எத்தனை பாடல்களை கொண்டது?
700 பாடல்களை
97. சாதவாகன வம்சத்தில் 23 வது அரசர் யார்?
கௌதம் புத்ர சதர்கனி
98. சாகர்களை கௌதம புத்ர சதர்கனி வென்றதால்——— என்ற பட்டத்தை சூட்டிக் கொண்டார்.
சகாரி
99. கௌதம புத்ர சதர்கனியின் சாதனைகளை பற்றிக் கூறும் கல்வெட்டு எது?
நாசிக் கல்வெட்டு
100. நாசிக் கல்வெட்டை வடிவமைத்தவர் யார்?
கௌதமி பாலஸ்ரீ
No comments:
Post a Comment