SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Tuesday, July 19, 2016

17.ஒளியியல் & ஒலியியல்

ஒளியியல்
21.விண்மீன்கள் மின்னுதல் இதனால் தோன்றுகிறது
அ)சிறிய அளவிலான வளிமண்டல் ஒளிவிலகல்
ஆ)பெரிய அளவிலான வளிமண்டல ஒளிவிலகல்
இ)ஒளிவிலகல் எண் சமமானதாக உள்ளது
ஈ)ஒளிவிலகல் எண் வேறுபாடடைந்து உள்ளது
விடை : ஆ)பெரிய அளவிலான வளிமண்டல ஒளிவிலகல்

22.வழிழிக்கோளம் ஏறத்தாழ…… விட்டமுடைய கோள வடிவ அமைப்பைக் கொண்டது
அ)1.3 செ.மீ
ஆ)1.8 செ.மீ
இ)2.3 செ.மீ
ஈ)2.7 செ.மீ
விடை : இ)2.3 செ.மீ

23.தன் வழியே பகுதியாக ஒளியைச் செல்ல அனுமதிக்கும பொருட்கள்
அ)ஒளிபுகும்  பொருள்கள்
ஆ)ஒளிபுகாப் பொருட்கள்
இ)ஒளி கசியும் பொருட்கள்
ஈ)நிழல்கள்
விடை : இ)ஒளி கசியும் பொருட்கள்

ஒலியியல்
1.20,000 ஹெர்ட்ஹூக்கு அதிகமான அதிர்வெண் கொண்ட ஒலி
அ)குற்றொலி
ஆ)மீயொலி
இ)ஒலி இசைச்சல்
ஈ)ஒலிமூலம்
விடை : ஆ)மீயொலி

2.கண்ணாடி ஒளிஇழை….தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது
அ)மீயொலி
ஆ)ஒலி மூலம்
இ)முழு அக எதிரொலிப்பு
ஈ)ஒளி விலகல்
விடை : இ)முழு அக எதிரொலிப்பு

3.இவற்றில்  தவறான கூற்று எது?
அ)ஒலியானது ஒலிமூலத்திலிருந்து கேட்குநருக்கு ஊடகத்தின் வழியே பரவுகிறது
ஆ)அதிர்வுறும் பொருள்களின் முன்இபின் இயக்கத்தின் காரணமாக ஒலி அலை பரவுகிறது
இ)எந்த பொருளின் வழியே ஒலியலைக்ள பரவுகின்றனவே அதற்கு ஊடகம் என்று பெயர்
ஈ)ஊடகமானது திடப்பொருளை மட்டுமே குறிக்கும்
விடை : ஈ)ஊடகமானது திடப்பொருளை மட்டுமே குறிக்கும்

4.ஒலி வெற்றிடத்தின் வழியே பரவாது என நிரூபித்தவர்
அ)கெல்வின்
ஆ)சார்லஸ்
இ)இராபர்ட் பாயில்
ஈ)ஜேம்ஸ் பிரிஸ்கோட் ஜுல்
விடை : இ)இராபர்ட் பாயில்

5.ஊடகத்ததுகள் அலைபரவும்  திசைக்கு செங்குத்தான திசையில் அதிர்வுறவதால் உருவாகும்  அலைகள்
அ)நெட்டலைகள்
ஆ)குறுக்கலைகள்
இ)ஒலி அலைகள்
ஈ)அவை அனைத்தும்
விடை : ஆ)குறுக்கலைகள்

6.இவற்றில் நெட்டலைகள் எது ?
அ)நீரலைகள்
ஆ)இழுத்துக்கட்டப்பட்ட கம்பியின் அதிர்வுகள்
இ)ஒலி அலைகள்
ஈ)நீரில் மேற்பரப்பில் உருவாகும் அலைகள்
விடை : இ)ஒலி அலைகள்

7.நடுநிலைப்புள்ளியிலிருந்து கீழ்நோக்கு திiசியல் ஊடகத்துகளில் பெரும இடப்பெயர்ச்சி
அ)நெருக்கம்
ஆ)நெகிழ்வு
இ)முகடு
ஈ)அகடு
விடை : ஈ)அகடு

8.இவற்றில் குறுக்கலைகள் பற்றிய தவறான கூற்று எது?
அ)முகடுகள்இஅகடுகள் உருவாகின்றன
ஆ)நெருக்கமும் நெகிழ்வுகளும் உருவாகின்றன
இ)திட மற்றம் திரவ மேற்பரப்பின் வழியே பரவுகின்றன
ஈ)ஊடகத்துகள்கள்,அலை பரவும் திரைசக்கும் செங்குத்தாக அதிர்வுறுகின்றன
விடை : ஆ)நெருக்கமும் நெகிழ்வுகளும் உருவாகின்றன

9.இவற்றில் நெட்டலைகள் பற்றிய சரியான கூற்று எது?
அ)ஊடகத்துகள்கள் மலைபரவும் திசைக்கு இணையின் திசையில் அதிர்வுறுகினறன
ஆ)நெருக்கமும் நெகிழ்வும் உருவாகின்றன
இ)திடஇதிரவ மற்றும் வாயுக்களின் வழியே பரவுகின்றன
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்

10.இவற்றில் பொருத்தமான இணை எது ?
அ)வீச்சு ஜுல்
ஆ)அலைவு காலம் - ஹெர்ட்ஸ்
இ)அதிர்வெண் - வினாடி
ஈ)அலைநீளம் - மீட்டர்
விடை : ஈ)அலைநீளம் - மீட்டர் 



No comments:

Post a Comment