TNPSC பொதுத்தமிழ்
51.ஒலி வேறுபாடு அறிந்து சரியான பொருளையறிக
குலவி குளவி குழவி
அ)வளைந்து வண்டு துண்டு
ஆ)வளைந்து வண்டு குழந்தை
இ)வண்டு குழந்தை வளைந்து
ஈ)எலி வண்டு வளைந்து
விடை : ஆ)வளைந்து வண்டு குழந்தை
52.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளையறிக
ஒலி ஒளி ஒழி
அ)சத்தம் வெளிச்சம் நீக்கு
ஆ)வெடி விளக்கு ஒழிதல்
இ)தட்டு காட்டு எடு
ஈ)ஒலித்தல் வாழ்தல் விரட்டு
விடை : அ)சத்தம் வெளிச்சம் நீக்கு
53.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளையறிக
கலை களை கழை
அ)ஆடு வயல் மேய்ச்சல்
ஆ)ஆடை புல் மூங்கில்
இ)பசு தோப்பு நாணல்
ஈ)குரங்கு மரம் விழுது
விடை : ஆ)ஆடை புல் மூங்கில்
54.ஒலி வெறுபாடறிந்து சரியான தமிழ்ச் சொற்களைத் தேர்ந்தெடுக்க
மாதம் மும் ............... பொழிகிறதா?
அ)மாறி
ஆ)மாரி
இ)மடங்கு
ஈ)மரை
விடை : ஆ)மாரி
55.ஒலி வேறுபாடறிந்து சரியான தமிழ்ச் சொற்களைத் தேர்ந்தெடுக
அ)அறி
ஆ)அரி
இ)அழி
ஈ)அலி
விடை : அ)அறி
56.'ஒரெழுத்து ஒரு மொழி" உரிய பொருளைக் கண்டறிக - 'மோ"
அ)அள்ளுதல்
ஆ)முகர்தல்
இ)எடுத்தல்
ஈ)தொடுத்தல்
விடை : ஆ)முகர்தல்
57.'ஒரெழுத்து ஒரு மொழி " உரிய பொருளைக் கண்டறிக - 'பே"
அ)இடி
ஆ)மேகம்
இ)மழை
ஈ)வானம்
விடை : ஆ)மேகம்
58.'ஒரெழுத்து ஒரு மொழி" உரிய பொருளைக் கண்டு குறிப்பிடுக - 'ஆ"
அ)கோயில்
ஆ)உரைத்தல்
இ)விலங்கு
ஈ)பசு
விடை : ஈ)பசு
59.ஒரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருளைக் கண்டு
குறிப்பிடுக - நொ
அ)மகிழ்ச்சி
ஆ)வருந்து
இ)சிரிப்பு
ஈ)அழுகை
விடை : ஆ)வருந்து
60.வேர்ச்சொல்லத் தேர்வு செய்க - 'உண்கிறான்"
அ)உண்
ஆ)உண்கு
இ)உண்டு
ஈ)உண்ணு
விடை : அ)உண்
No comments:
Post a Comment