.
281. டிப்தீரியா என்றால் தொண்டைக்கட்டு நோய். இது பொதுவாகக் தாக்குவது குழந்தைகளை.
282. இளம்பிள்ளை வாதம் வைரசால் ஏற்படும். இளம்பிள்ளை வாத நோய்க்கு மற்றொரு பெயர் போலியோ.
283. இந்நோய் பாதிக்கப்பட்டால் உடலில் பாதிக்கப்படும் பகுதிகள் கை கால்கள்.
284. குழந்தைகளுக்கு போடப்படும் தடுப்பூசிகள் டிப்தீரியா, போலியோ, டெடனஸ் தாக்காமல் இருக்க.
285. புற்றுநோயை குணப்படுத்த ரேடியம், லேசர் சிகிச்சை. முதுகெலும்புள விலங்குகளிலிருந்து மனிதனுக்குப் பரவுகின்ற தொற்று நோய்களை விலங்கு பரிவர்த்தன நோய்கள் - சூனோசஸ் என்று கூறுவார்கள்.
286. உலகத்தில் 180 வகையான சூனோசஸ் கண்டறியப்பட்டுள்ளது. அவற்றில் தொழில் சம்பந்த்பட்ட நோய்கள் மட்டும் 45.
287. பிளேக் உண்டாக்கும் பாக்டீரியா எர்சினியா பெஸ்டிஸ். குளிர் காய்ச்சல், தலைவலி, நிணநீர் சுரப்பி வீங்கி வலித்தல் ஆகியவை பிளேக் நோயின் அறிகுறிகள்.
288. பாதிக்கபட்ட எலி கடிப்பதன் மூலம் பிளேக் பரவுகிறது. எலியின் உடலிலிருந்து தெள்ளுப் பூச்சிகள் மனதனைக் கடிப்பதன் மூலம் பிளேக் பரவுகிறது. 1994-ம் வருடம் பிளேக் நோய் மிகவும் அதிகமாகப் பரவிய மாநிலம் குஜராத்.
289. அட்லான்டிக் பகுதியில் ஆண்டிற்கு ஒரு முறைதான் சூரியன் உதயமாகிறது.
290. மகாத்மா காந்தி இந்தியாவில் மட்டுமல்ல தென்னாப்ரிக்காவிலும் சிறைத் தண்டனை அனுபவித்துள்ளார்.
291. முதன் முதலில் கேள்விக் குறியைப் பயன்படுத்திய மொழி இலத்தின் மொழிதான்.
292. கைரேகையைப் வைத்து குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கும் முறையைக் கண்டறிந்தவர் எட்வர்ட் ஹென்றி.
293. மீன் தன் வாழ்நாள் இறுதி வரை வளர்ச்சி அடைந்து கொண்டே இருக்கும்.
294. பசுமைப் புரட்சி என்று கேள்விப்பட்டிருப்போம். அது என்ன இளஞ்சிவப்புப் புரட்சி. அதாவது மருந்து வகைகள் உற்பத்தியை பெருக்குவது ஆகும்.
295. நீலப் புரட்சி என்பது மீன் உற்பத்தியை பெருக்குவதும், வெண்மைப் புரட்சி என்பது பால் உற்பத்தியைப் குறிப்பதும் ஆகும்.
296. மஞ்சள் புரட்சி என்பது எண்ணெய் வித்துக்களின் உற்பத்தியை பெருக்குவது ஆகும்.
297. உங்சகளுக்குத் தெரிந்த தகவல்களையும் எங்றகளுக்கு தெரிவியுங்கள். உங் களது பெயருடன் வெளியிடப்படும்.
298. > சுழ்நிலை என்ற சொல்லை உருவாக்கிய விலங்கியல் வல்லுநர் யார்? ரேய்ட்டர்.
299. > சுழ்நிலை என்ற சொல்லை யாரால் வரையறுக்கப்பட்டது?ஹேக்கல்.
300. > கங்காரூ அதிகம் உள்ள நாடு?ஆஸ்திரேலியா.
No comments:
Post a Comment