இந்திய வரலாறு
1. இருட்டறை துயர சம்பவம் நடந்த ஆண்டு எது? கி.பி.1756
2. இந்தியாவில் இருட்டறைச் சம்பவத்திற்கு காரணமான வங்காள நவாப் யார்?சிராஜ் உத்தெனலா
3. ஆங்கிலேயரின் ஆதிக்க விஸ்தரிப்பிற்கு வித்திட்ட போர் எது? பிளாசிப் போர்
4. பிளாசிப்போர் நடந்த ஆண்டு எது? கி.பி.1757
5. பிளாசிப் போரின் விளைவாக நவாப்பாக்கப்பட்டவர் யார்? மிர்ஜாபர்
6. பக்சார் போர் நடந்த ஆண்டு எது? கி.பி.1764
7. ஆங்கிலேய பேரரசின் விரிவாக்கத்திற்கு வித்திட்ட போர் எது? பக்சார் போர்
8. வங்காளத்தின் முதல் கவர்னர் ஜெனரல் யார்? இராபர்ட் கிளைவ்
9. வங்காளத்தின் இரட்டை ஆட்சியை ஏற்படுத்தியவர் யார்? இராபர்ட் கிளைவ்
10. இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல் யார்? வாரன் ஹேஸ்டிங்
11. பிட் இந்தியச் சட்டம் ஏற்படுத்தப்பட்ட ஆண்டு எது? கி.பி.1784
12. முதல் ஆங்கிலோ-மராத்தியப் போரில் ஈடுபட்ட கவர்னர் ஜெனரல் யார்? வாரன் ஹேஸ்டிக்ஸ்
13. மைசூரின் முதல் முஸ்லீம் அரசர் யார்? ஜதர் அலி
14. நீதியையும்இ நிர்வாகத்தையும் பிரித்த கவர்னர் ஜெனரல் யார்? காரன்வாலிஸ் பிரபு
15. நிலைத்த நிலவரித் திட்டம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு எது? கி.பி.1793
16. மைசூரின் புலி என அழைக்கப்பட்டவர் யார்? திப்பு சுல்தான்
17. தலையிடாக் கொள்கையை பின்பற்றிய கவர்னர் ஜெனரல் யார்? சர் ஜான் ஷோர்
18. துணைப்படைத் திட்டத்தை அறிமுகப்படுத்திய கவர்னர் ஜெனரல் யார்? வெல்லெஸ்லி பிரபு
19. நான்காவது மைசூர் போரில் வெல்லெஸ்லி பிரபுவை எதிர்த்த மைசூர் மன்னர் யார்? திப்பு சுல்தான்
20. திப்புசுல்தான் கொல்லப்பட்ட மைசூர் போர் எது? நான்காவது மைசூர் போர்
No comments:
Post a Comment