SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Thursday, July 7, 2016

12..tnpsc question with answers

161. * அசோகர் கற்தூண்களை உருவாக்கினார்.
162. * பிராகிருதம் என்னும் மொழியில் அசோகரின் பெரும்பாலான கல்வெட்டுகள் எழுதப்பட்டன.
163. * அசோகரின் கல்வெட்டு வடமேற்கு எல்லைப் பகுதியில் கரோஸ்தி என்னும் எழுத்தில் பொறிக்கப்பட்டிருந்தது.
164. * ஆப்கானிஸ்தான் பகுதியில் கிரேக்க எழுத்துக்களில் பொறிக்கப்பட்டிருந்தது.
165. * ஆட்சி வசதிக்காக அசோகரது பேரரசு 5 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டது.
166. * அசோகர் அரியணை ஏறிய ஆண்டு - கி.மு.273
167. * தட்சசீலம் - அசோகப் பேரரசின் வடக்குப் பகுதிக்கான தலைநகரம் ஆகும்.
168. * உஜ்ஜயினி - அசோகப் பேரரசின் மேற்குப் பகுதிக்கான தலைநகரம் ஆகும்.
169. * சுவர்ணகிரி - அசோகப் பேரரசின் தெற்குப் பகுதிக்கான தலைநகரம் ஆகும்.
170. * தோசாலி - அசோகப் பேரரசின் கிழக்குப் பகுதிக்கான தலைநகரம் ஆகும்.
171. * அசோகர் பாடலிபுத்திரத்திலிருந்து மையப்பகுதியை ஆட்சி செய்தார்.
172. * அசோகர் மாநில அதிகாரிகளாகவும், ஆளுநராகவும் மகாமாத்திரரை நியமித்தார்.
173. * அசோக பேரரசின் எல்லைப் பகுதியை மகாமாத்திரர் கண்காணித்தார்.
174. * மெகஸ்தனிஸின் இண்டிகா என்ற நூல் பாடலிபுத்திரத்தை 30 பேர் கொண்ட நகர மன்றம் ஆட்சி செய்ததாக தெரிவிக்கிறது.
175. * பிருகத்திரதன் மெளரிய வம்சத்தின் கடைசி அரசர்.
176. * பிருகத்திரதன் - புஷ்யமித்ரசுங்கனால் படுகொலை செய்யப்பட்டார்.
177. * பிருகத்திரதனுக்கு பிறகு சுமார் 500 ஆண்டுகள் மகதம் வலுவிழந்து நின்றது.
178. * பொதுப்பட்டியல் என்னும் கருத்துப்படிவம் எந்த நாட்டு அரசியலமைப்பிலிருந்து பெறப்பட்டது – ஆஸ்திரேலியா
179. * 1947-ல் சுதந்திர நாளன்று பாராளுமன்றத்தில் ஸாரே ஜஹான்சே அச்சா என்ற பாடலைப் பாடியவர் – சுதேசா கிருபளானி
180. * இந்திய தேசிய காங்கிரசின் தலைவர் பதவியிலிருந்து 1939-ல் மகாத்மா காந்தியுடன் கருத்து வேறுபாடு கொண்டு இராஜிநாமா செய்தவர் – நேதாஜி




No comments:

Post a Comment