இந்திய வரலாறு
1. பாமினி அரசு தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு எது?
அ) கி.பி.1347
ஆ) கி.பி.1337
இ) கி.பி.1344
ஈ) கி.பி.1342
விடை: அ) கி.பி.1347
2. அலாவுதீன் அசனுக்கு பின் ஆட்சி செய்தவர் யார்?
அ) இரண்டாம் முகமது ஷா
ஆ) முதலாம் முகமது ஷா
இ) பெரோஸ்ஷா
ஈ) அகமது ஷா
விடை: ஆ) முதலாம் முகமது ஷா
3. பீடாரில் கல்லூரிக் கட்டடம் கட்டுவதற்காக தன் செல்வம் அனைத்தையும் செலவளித்தவர் யார்?
அ) அலாவுதீன் அசன்
ஆ) முதலாம் முகமது ஷா
இ) பெரோஸ்ஷா
ஈ) முகமது கவான்
விடை: ஈ) முகமது கவான்
4. பாமினி சுல்தான்கள் ஆதரித்த மொழி எது?
அ) இந்தி
ஆ) உருது
இ) தெலுங்கு
ஈ) கன்னடம்
விடை: ஆ) உருது
5. கிருஷ்ண தேவராயரின் மரபு.....
அ) சங்கம மரபு
ஆ) சாளுவ மரபு
இ) துளுவ மரபு
ஈ) அரவீடு மரபு
விடை: இ) துளுவ மரபு
6. தன் மந்திரியால் சிறைவைக்கப்பட்ட மன்னர் யார்?
அ) கிருஷ்ணதேவராயர்
ஆ) சதாசிவராயர்
இ) அச்சுதராயர்
ஈ) இவர்களில் எவருமில்லை
விடை: ஆ) சதாசிவராயர்
7. பாமினி அரசைத் தோற்றுவித்தவர் யார்?
அ) அலாவுதீன் அசன்
ஆ) முதலாம் முகமது ஷா
இ) பெரோஸ்ஷா
ஈ) அகமது ஷா
விடை: அ) அலாவுதீன் அசன்
8. முகம்மது ஷா புகழ்பெற்ற எந்தக்கோட்டையை வாரங்கல் அரசரிடமிருந்து கைப்பற்றினார்.
அ) சாந்த்மினார்
ஆ) அஜ்மீர்
இ) கோல்கொண்டா
ஈ) தௌலதாபாத்
விடை: இ) கோல்கொண்டா
9. அகமதுஷா குல்பர்காவிலிருந்து எங்கு தலைநகரை மாற்றினார்?
அ) பீரார்
ஆ) பீடார்
இ) கோல்கொண்டா
ஈ) சாந்த்மினர்
விடை: ஆ) பீடார்
10. விஜய நகரத்தின் முக்கியத் துறைமுகமாகக் கருதப்பட்ட கோவாவைக் கைப்பற்றியவர் யார்?
அ) அகமது ஷா
ஆ) முகமது கவான்
இ) இரண்டாம் முகமது ஷா
ஈ) பெரோஸ்ஷா
விடை: ஆ) முகமது கவான்
No comments:
Post a Comment